• Nov 07 2025

இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; வெடித்து சிதறிய சிலிண்டர்கள் தீப்பிடித்து எரிந்து நாசம்!

shanuja / Oct 8th 2025, 3:04 pm
image

சிலிண்டர்களுடன் பயணித்த லொறி விபத்திற்குள்ளானதில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி  முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. 


இந்த விபத்துச் சம்பவம் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் - அஜ்மெர் நெடுஞ்சாலையில் இன்று (8) சம்பவித்துள்ளது. 


குறித்த சாலையில் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியும்  இரசாயனம் ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.


இதன்போதே இரசாயனம் எற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் சிலிண்டர்கள் முழுவதும் வீதியில் வெடித்துச் சிதறி எரிந்துள்ளது. 


இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


சிலிண்டர்கள் முழுவதுமாக வெடித்துச் சிதறி வீதி முழுவதும் பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர்.


எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கத் தொடங்கி பற்றி எரிய ஆரம்பித்ததும் அருகிலுள்ள வாகனங்கள் பாதிக்கப்பட்டன. தீக்குழம்புகள்  மற்றும் வெடிப்புகள் பல கிலோமீற்றர் தொலைவில் இருந்து  தெரியும் அளவுக்கு பற்றி எரிந்துள்ளது. 


இதனால் அந்தப்பகுதி முழுவதும் பரபரப்பானது. அத்துடன் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; வெடித்து சிதறிய சிலிண்டர்கள் தீப்பிடித்து எரிந்து நாசம் சிலிண்டர்களுடன் பயணித்த லொறி விபத்திற்குள்ளானதில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி  முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் - அஜ்மெர் நெடுஞ்சாலையில் இன்று (8) சம்பவித்துள்ளது. குறித்த சாலையில் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியும்  இரசாயனம் ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.இதன்போதே இரசாயனம் எற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் சிலிண்டர்கள் முழுவதும் வீதியில் வெடித்துச் சிதறி எரிந்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிலிண்டர்கள் முழுவதுமாக வெடித்துச் சிதறி வீதி முழுவதும் பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர்.எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கத் தொடங்கி பற்றி எரிய ஆரம்பித்ததும் அருகிலுள்ள வாகனங்கள் பாதிக்கப்பட்டன. தீக்குழம்புகள்  மற்றும் வெடிப்புகள் பல கிலோமீற்றர் தொலைவில் இருந்து  தெரியும் அளவுக்கு பற்றி எரிந்துள்ளது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் பரபரப்பானது. அத்துடன் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement