கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்ட பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபடுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு நேற்றையதினம் இரவு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இரண்டு டிப்பர்கள் மற்றும் இரண்டு உழவு இயந்திரங்கள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த கல்லாறு பகுதியில் வன விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் காணப்படுவதன் காரணமாக அப்பகுதியில் மணல் அகழ்வு முற்றாகக தடை செய்யப்பட்டிருந்தது
இந்நிலையில் குறித்த பகுதியில் சிலர் சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக இரண்டு டிப்பர்கள் மற்றும் இரண்டு இயந்திரங்கள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
குறித்த சம்பவத்தின் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் தர்மபுர பொலிசார் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தடய பொருட்களை எதிர்வரும் 11 ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது - வாகனங்கள் பறிமுதல் கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்ட பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபடுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு நேற்றையதினம் இரவு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இரண்டு டிப்பர்கள் மற்றும் இரண்டு உழவு இயந்திரங்கள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த கல்லாறு பகுதியில் வன விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் காணப்படுவதன் காரணமாக அப்பகுதியில் மணல் அகழ்வு முற்றாகக தடை செய்யப்பட்டிருந்ததுஇந்நிலையில் குறித்த பகுதியில் சிலர் சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக இரண்டு டிப்பர்கள் மற்றும் இரண்டு இயந்திரங்கள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.குறித்த சம்பவத்தின் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் தர்மபுர பொலிசார் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தடய பொருட்களை எதிர்வரும் 11 ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிசார் தெரிவித்துள்ளனர்.