நாட்டின் இரண்டு பகுதிகளில் மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை பிரதேசத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் வீட்டில் மின்குமிழ்களை பொருத்திக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை பிரதேசத்தில் 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சட்டவிரோத மின்சார இணைப்பை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் இரு சம்பவங்களையும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மினுவாங்கொடை, மஹியங்கனையில் மின்சாரம் தாக்கி இருவர் பரிதாப பலி நாட்டின் இரண்டு பகுதிகளில் மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை பிரதேசத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் வீட்டில் மின்குமிழ்களை பொருத்திக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை பிரதேசத்தில் 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சட்டவிரோத மின்சார இணைப்பை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸார் இரு சம்பவங்களையும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.