• Oct 30 2024

யாழில் கசிப்புடன் பயணம் செய்த இருவர் சிக்கினர்!

Sharmi / Dec 12th 2022, 1:45 pm
image

Advertisement

நேற்றையதினம் (11) அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவரை பகுதியில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவர்களிடமிருந்து தலா ஆயிரத்து ஐந்நூறு மில்லிமீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் வீதியில் செல்லும்போது கசிப்பினை உடமையில் வைத்திருந்தார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், சான்றுப் பொருட்களுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.

அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கசிப்புடன் பயணம் செய்த இருவர் சிக்கினர் நேற்றையதினம் (11) அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவரை பகுதியில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்களிடமிருந்து தலா ஆயிரத்து ஐந்நூறு மில்லிமீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் வீதியில் செல்லும்போது கசிப்பினை உடமையில் வைத்திருந்தார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், சான்றுப் பொருட்களுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர். அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement