• Apr 16 2026

தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இருவர் பலி - 6 பேர் மாயம்!

Chithra / Apr 16th 2026, 9:09 pm
image

குருநாகல் - நிக்கவரெட்டிய பகுதியில் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இருவர் உயிரிழந்ததுடன்,  6 பேர் காணாமல் போயுள்ளனர். 


தெதுரு ஓயாவில் 15 பேர் இவ்வாறு  நீராடச் சென்ற போதே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.  


இன்று (16) மாலை இப் பயங்கரம் இடம்பெற்றுள்ளது. 


நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நீராடச் சென்ற குழுவில் மேலும் 6 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.


நீரில் மூழ்கிய நிலையில் இருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காணாமல்போன 6 பேரையும் கண்டுபிடிப்பதற்காக பிரதேச மக்களும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ்  ஊடகப் பிரிவு  குறிப்பிட்டுள்ளது.

தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இருவர் பலி - 6 பேர் மாயம் குருநாகல் - நிக்கவரெட்டிய பகுதியில் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இருவர் உயிரிழந்ததுடன்,  6 பேர் காணாமல் போயுள்ளனர். தெதுரு ஓயாவில் 15 பேர் இவ்வாறு  நீராடச் சென்ற போதே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இன்று (16) மாலை இப் பயங்கரம் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நீராடச் சென்ற குழுவில் மேலும் 6 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.நீரில் மூழ்கிய நிலையில் இருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காணாமல்போன 6 பேரையும் கண்டுபிடிப்பதற்காக பிரதேச மக்களும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ்  ஊடகப் பிரிவு  குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement