• Nov 28 2024

உழவனூர் பகுதியில் சகோதரிகள் இருவர் வைத்தியதுறையில் விசேட சித்தி

Tamil nila / Jun 4th 2024, 7:33 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உழவனூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் வைத்தியதுறையில் விசேட சித்தி பெற்றுள்ளனர்.

கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உழவனூர் பகுதியில் இரண்டு மாணவிகள் க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் விசேட சித்தி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பின் தங்கிய கிராமமான உழவனூர் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி வறுமையான சூழ்நிலையிலும் தனது தந்தையின் தனி உழைப்பை மட்டும் வைத்து தமது கல்வியை தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளனர்.

மாணவிகளின் தந்தை லொத்தர் சீட்டுக்கள் விற்பவர். அவரது தனி வருமானத்தை கொண்டு தம்மை கல்வி பயில வைத்ததாகவும், கிட்டத்தட்ட 5 கிலோமீற்றர் சென்று தர்மபுரம் மகாவித்தியாலயத்திலேயே தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கோண்டதாகவும் தெரிவித்தனர்.


உழவனூர் பகுதியில் சகோதரிகள் இருவர் வைத்தியதுறையில் விசேட சித்தி கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உழவனூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் வைத்தியதுறையில் விசேட சித்தி பெற்றுள்ளனர்.கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உழவனூர் பகுதியில் இரண்டு மாணவிகள் க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் விசேட சித்தி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.பின் தங்கிய கிராமமான உழவனூர் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி வறுமையான சூழ்நிலையிலும் தனது தந்தையின் தனி உழைப்பை மட்டும் வைத்து தமது கல்வியை தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளனர்.மாணவிகளின் தந்தை லொத்தர் சீட்டுக்கள் விற்பவர். அவரது தனி வருமானத்தை கொண்டு தம்மை கல்வி பயில வைத்ததாகவும், கிட்டத்தட்ட 5 கிலோமீற்றர் சென்று தர்மபுரம் மகாவித்தியாலயத்திலேயே தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கோண்டதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement