யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறையிலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம்(26) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகர மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக தேசிய கொடியை மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏற்றி வைத்ததை தொடர்ந்து பொது நினைவிடத்திர்க்கு மலர் மாலை, அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலிகளும் இடம்பெற்றன.
பொது ஈகை சுடரினை பிரதேச செயலாளர் கு. பிரபாகரமூர்த்தி ஏற்றிவைக்க சம நேரத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அவர்களது உறவுகளால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சுனாமியில் உயிர் நீத்தவர்களது உறவுகள் என நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கண்ணீரில் மூழ்கிய உடுத்துறை. ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி.samugammedia யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறையிலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம்(26) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகர மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக தேசிய கொடியை மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏற்றி வைத்ததை தொடர்ந்து பொது நினைவிடத்திர்க்கு மலர் மாலை, அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலிகளும் இடம்பெற்றன.பொது ஈகை சுடரினை பிரதேச செயலாளர் கு. பிரபாகரமூர்த்தி ஏற்றிவைக்க சம நேரத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அவர்களது உறவுகளால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சுனாமியில் உயிர் நீத்தவர்களது உறவுகள் என நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.