ரஷ்யாவின் எல்லையில் இருந்து சுமார் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள முக்கிய தொழிற்பகுதியை உக்ரைன் ட்ரோன்கள் தாக்கியுள்ளது.
உக்ரைன் தரப்பின் தகவலின்படி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர் அப்பகுதியில் தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே தொழிற்பேட்டையில் Wildberries நிறுவனத்துக்குச் சொந்தமான கிடங்கு ஒன்றும் இருந்ததாகவும், தாக்குதலால் ஏற்பட்ட தீ காரணமாக அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தக் கிடங்கில் சில்லறை விற்பனைப் பொருட்கள் சேமித்து வைக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து உக்ரைன் மேற்கொண்டு வரும் தொலைதூர ட்ரோன் தாக்குதல்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது
போர்முனையை தாண்டி ரஷ்யாவுக்குள் எண்ணெய் வளாகத்தை குறிவைத்த உக்ரைன் ரஷ்யாவின் எல்லையில் இருந்து சுமார் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள முக்கிய தொழிற்பகுதியை உக்ரைன் ட்ரோன்கள் தாக்கியுள்ளது.உக்ரைன் தரப்பின் தகவலின்படி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் அப்பகுதியில் தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே தொழிற்பேட்டையில் Wildberries நிறுவனத்துக்குச் சொந்தமான கிடங்கு ஒன்றும் இருந்ததாகவும், தாக்குதலால் ஏற்பட்ட தீ காரணமாக அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தக் கிடங்கில் சில்லறை விற்பனைப் பொருட்கள் சேமித்து வைக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதல், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து உக்ரைன் மேற்கொண்டு வரும் தொலைதூர ட்ரோன் தாக்குதல்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது