• May 08 2025

செயற்கை நுண்ணறிவு அபாயங்களைக் கையாள்வது தொடர்பில் பரிந்துரைகளை வெளியிட்டுள்ள ஐ.நா!

Tamil nila / Sep 19th 2024, 10:11 pm
image

செயற்கை நுண்ணறிவு தொடர்பான அபாயங்களையும் அதை நிர்வகிப்பதில் இருக்கக்கூடிய குறைபாடுகளையும் கையாள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழு ஒன்று, ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

அந்தப் பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை அக்குழு வியாழக்கிழமையன்று வெளியிட்டது.

அனைத்துலக அளவில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை நிர்வகிப்பதில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைக் கவனிக்க ஐநா சென்ற ஆண்டு 39 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்தது. அக்குழு இப்போது முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து இம்மாதம் நடைபெறவுள்ள ஐநா கூட்டத்தில் கலந்துபேசப்படும்.

பாரபட்சமின்றி செயற்கை நுண்ணறிவைப் பற்றிய நம்பகமான தகவல்களை வெளியிடவும் செயற்கை நுண்ணறிவுக் கூடங்களுக்கும் உலகிற்கும் இடையிலான வேறுபாடுகளைக் கவனிக்கவும் குழு ஒன்றை அமைக்குமாறு செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் இயங்கும் ஓப்பன்ஏஐ நிறுவனம் 2022ஆம் ஆண்டில் சேட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவுத் தளத்தை வெளியிட்டது. அதிலிருந்து செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

பொய்த் தகவல்கள், செய்திகள் பரப்பப்படுவது, பிறருக்குச் சொந்தமான பதிவுகள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவது ஆகியவற்றின் தொடர்பில் கவலைகளும் அதிகரித்துள்ளன. செயற்கை நுண்ணறிவுத் தளங்கள், கருவிகள் ஆகியவற்றின் பயன்பாட்டை நிர்வகிக்கும் நோக்குடன் சில நாடுகள் மட்டுமே சட்டங்களை வரைந்துள்ளன.

இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முன்னோடியாக இருந்து விரிவான செயற்கை நுண்ணறிவுச் சட்டத்தைச் செயல்படுத்த அனுமதி வழங்கியது. 

இதன் தொடர்பிலான விதிமுறைகளைப் பின்பற்றுவதை அவரவர் விருப்பத்துக்கு விட்டது அமெரிக்கா.

சீனா சமூக நிலைத்தன்மையையும் அரசாங்கத்துக்கு இருக்கும் ஆதிக்கத்தையும் தொடரச் செய்யும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது.

செயற்கை நுண்ணறிவு அபாயங்களைக் கையாள்வது தொடர்பில் பரிந்துரைகளை வெளியிட்டுள்ள ஐ.நா செயற்கை நுண்ணறிவு தொடர்பான அபாயங்களையும் அதை நிர்வகிப்பதில் இருக்கக்கூடிய குறைபாடுகளையும் கையாள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழு ஒன்று, ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.அந்தப் பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை அக்குழு வியாழக்கிழமையன்று வெளியிட்டது.அனைத்துலக அளவில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை நிர்வகிப்பதில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைக் கவனிக்க ஐநா சென்ற ஆண்டு 39 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்தது. அக்குழு இப்போது முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து இம்மாதம் நடைபெறவுள்ள ஐநா கூட்டத்தில் கலந்துபேசப்படும்.பாரபட்சமின்றி செயற்கை நுண்ணறிவைப் பற்றிய நம்பகமான தகவல்களை வெளியிடவும் செயற்கை நுண்ணறிவுக் கூடங்களுக்கும் உலகிற்கும் இடையிலான வேறுபாடுகளைக் கவனிக்கவும் குழு ஒன்றை அமைக்குமாறு செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் இயங்கும் ஓப்பன்ஏஐ நிறுவனம் 2022ஆம் ஆண்டில் சேட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவுத் தளத்தை வெளியிட்டது. அதிலிருந்து செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பெரிய அளவில் வளர்ந்துள்ளது.பொய்த் தகவல்கள், செய்திகள் பரப்பப்படுவது, பிறருக்குச் சொந்தமான பதிவுகள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவது ஆகியவற்றின் தொடர்பில் கவலைகளும் அதிகரித்துள்ளன. செயற்கை நுண்ணறிவுத் தளங்கள், கருவிகள் ஆகியவற்றின் பயன்பாட்டை நிர்வகிக்கும் நோக்குடன் சில நாடுகள் மட்டுமே சட்டங்களை வரைந்துள்ளன.இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முன்னோடியாக இருந்து விரிவான செயற்கை நுண்ணறிவுச் சட்டத்தைச் செயல்படுத்த அனுமதி வழங்கியது. இதன் தொடர்பிலான விதிமுறைகளைப் பின்பற்றுவதை அவரவர் விருப்பத்துக்கு விட்டது அமெரிக்கா.சீனா சமூக நிலைத்தன்மையையும் அரசாங்கத்துக்கு இருக்கும் ஆதிக்கத்தையும் தொடரச் செய்யும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now