• Nov 26 2024

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்குக்கு நிபந்தனையின்றி ஆதரவு! ஐக்கிய காங்கிரஸ் முடிவு...!

Chithra / Mar 8th 2024, 12:51 pm
image

 

இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவை ஆதரிப்பதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய காங்கிரசின் பொதுச் செயலாளர் சப்வான் சல்மான் தெரிவித்துள்ளார்.

எமது நாடு பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை எதிர் கொண்ட நேரத்தில், நாட்டை பொறுப்பெடுத்து பொருளாதரத்தை சீர் செய்வதற்கு எவரும் முன்வராத நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவரான ரணில் விக்ரமசிங்க தனி மனிதனாக நின்று நாட்டை பொறுப்பெடுத்தார்.

இவ்வாறு எமது நாட்டைப் பொறுப்பெடுத்து, சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெற்று கொஞ்சம் கொஞ்சமாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டெடியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்தால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக சீர் செய்ய முடியும் என்பதை பாமர மனிதன் தொடக்கம் படித்தவர்கள் வரை விளங்கிவைத்துள்ளனர்.

மேலும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதன் பின்னர், நாட்டில் எந்த இனங்களுக்கு இடையிலும் இன  பிரச்சினைகளும் ஏற்படாமல் சமத்துவமாக நாட்டை கொண்டு செல்கின்றமையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.

எனவேதான், இந்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் எவ்விதமான நிபந்தனைகளுமின்றி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதென எமது கட்சி தீர்மானித்துள்ளது. என்றார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்குக்கு நிபந்தனையின்றி ஆதரவு ஐக்கிய காங்கிரஸ் முடிவு.  இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவை ஆதரிப்பதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய காங்கிரசின் பொதுச் செயலாளர் சப்வான் சல்மான் தெரிவித்துள்ளார்.எமது நாடு பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை எதிர் கொண்ட நேரத்தில், நாட்டை பொறுப்பெடுத்து பொருளாதரத்தை சீர் செய்வதற்கு எவரும் முன்வராத நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவரான ரணில் விக்ரமசிங்க தனி மனிதனாக நின்று நாட்டை பொறுப்பெடுத்தார்.இவ்வாறு எமது நாட்டைப் பொறுப்பெடுத்து, சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெற்று கொஞ்சம் கொஞ்சமாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டெடியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்தால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக சீர் செய்ய முடியும் என்பதை பாமர மனிதன் தொடக்கம் படித்தவர்கள் வரை விளங்கிவைத்துள்ளனர்.மேலும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதன் பின்னர், நாட்டில் எந்த இனங்களுக்கு இடையிலும் இன  பிரச்சினைகளும் ஏற்படாமல் சமத்துவமாக நாட்டை கொண்டு செல்கின்றமையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.எனவேதான், இந்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் எவ்விதமான நிபந்தனைகளுமின்றி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதென எமது கட்சி தீர்மானித்துள்ளது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement