வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹேகித்த வீதி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (01) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை ஹேகித்த வீதி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று சுயநினைவின்றி இருப்பதாக வத்தளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபரான பெண்ணுக்கு முதலுதவி அளித்து அவரை விசாரணை செய்த போது சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 06 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், சந்தேக நபரான பெண் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருவதாக தெரியவந்துள்ளது.
பின்னர் சந்தேக நபரான பெண்ணுக்கு சொந்தமாக ராகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கையில் ராகம பிரதேசத்தில் உள்ள வீட்டிலிருந்த சந்தேக நபரான பெண்ணின் 40 வயதுடைய கணவன் ரி - 56 ரக துப்பாக்கி மற்றும் 113 தோட்டாக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதியில் சுயநினைவின்றி இருந்த பெண் போதைப்பொருளுடன் கைது வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹேகித்த வீதி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (01) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.வத்தளை ஹேகித்த வீதி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று சுயநினைவின்றி இருப்பதாக வத்தளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபரான பெண்ணுக்கு முதலுதவி அளித்து அவரை விசாரணை செய்த போது சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 06 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், சந்தேக நபரான பெண் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருவதாக தெரியவந்துள்ளது.பின்னர் சந்தேக நபரான பெண்ணுக்கு சொந்தமாக ராகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.குறித்த சோதனை நடவடிக்கையில் ராகம பிரதேசத்தில் உள்ள வீட்டிலிருந்த சந்தேக நபரான பெண்ணின் 40 வயதுடைய கணவன் ரி - 56 ரக துப்பாக்கி மற்றும் 113 தோட்டாக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.