• Nov 22 2024

புத்தளம் மக்களின் அனைத்து அபிலாசஷைகளையும் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியால் மாத்திமே நிறைவேற்றமுடியும் - எம்.என்.எம்.நஸ்மி

Tharmini / Oct 16th 2024, 10:19 am
image

புத்தளம் மாவட்ட மக்களின் அனைத்து அபிலாசஷைகளையும் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியால் மாத்திமே பெற்றுக்கொடுக்கும் முடியும் எனத் தெரிவித்த புத்தளம் நகர சபையின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய ஜனநாயக் குரல் கட்சியின் புத்தளம் மாவட்ட வேட்பாளருமான எம்.என்.எம்.நஸ்மி, முஸ்லிம் காங்கிரஸூம், மக்கள் காங்கிரஸூம் தமது கட்சி அரசியலுக்காக புத்தளம் மாவட்ட மக்களை பெரும்பான்மைக் கட்சிகளுக்கு அடகு வைத்தார்கள் எனவும், அவர்களால்தான் மூன்று தசாப்தங்களுக்கு மேல் புத்தளம் சிறுபான்மை மக்கள் தமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தனர் என்றும் கூறினார்.

புத்தளத்தில் உள்ள தனது கட்சி ஆதரவாளர்களுக்கு கட்சியின் அறிமுகம் மற்றும் கொள்கைகளை அறிமுகப்படுத்தும் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு (15)  தனது இல்லத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் உப தலைவர் ஸப்வான் சல்மான் , கட்சியின் புத்தளம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.என்.எம்.ரினோஸ் உட்பட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புத்தளம் மாவட்ட வேட்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜெஸீல், வன்னாத்தவில்லுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுல்தான் மரிக்கார், கருவலகஸ்வௌ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான சம்பத், காமினி சேனாநாயக்க, தொழிலதிபர் முஹம்மது முபாரக் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த புத்தளம் நகர சபையின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய ஜனநாயக் குரல் கட்சியின் புத்தளம் மாவட்ட வேட்பாளருமான எம்.என்.எம்.நஸ்மி மேலும் கூறுகையில், முஸ்லிம் காங்கிரஸூம், மக்கள் காங்கிரஸூம் தேசிய ரீதியில் பெரும்பான்மைக் கட்சிகளுடன் கட்சி அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக, புத்தளம் மக்களை கருவேப்பிலை போலவே இதுவரை காலமும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

நெய்னா மரிக்காருக்குப் பின்னர் புத்தளத்தில் சிறுபான்மை மக்கள் சார்பில் ஒரு பாராளுமன்ற பிரதிநிததித்துவத்தை இல்லாமல் செய்தது இரண்டு சிறுபான்மை கட்சிகள்தான். அதன் பின்னர் புத்தளம் சிறுபான்மை மக்கள் தமது பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை உணர்ந்ததன் விளைவுதான் கடந்த 2020 ஆம் அண்டு பொதுத் தேர்தலில் ஒருவரை எம்.பியாக பெற்றுக்கொண்டனர். ஆனால் அந்த பாராளுமன்ற உறுப்பினரும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவில்லை.புத்தளம் மக்கள் நல்ல மும்மொழி ஆற்றல் உள்ளவர்களை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தலைமைத்துவம், ஆளுமைமிக்க திறமையானவர்களை அனுப்பி வைப்பதன் மூலமே தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியும். புத்தளம் நகர பிதாவாக இருந்து மக்களுக்கு நல்ல பணிகளை முன்னெடுத்திருக்கிறேன். புல அபிவிருத்தி திட்டங்களை செய்திருக்கிறேன்.

இந்தப் பொதுத் தேர்தல் பெரும் சவால் என நினைக்கிறார்கள். நாம் பல தேர்தல் மேடைகளை சந்தித்திருக்கிறோம். இந்த பொதுத் தேர்தல் ஒன்றும் எமக்கு சவாலே கிடையாது. ஏனென்றால், இன்று மக்கள் விரும்பு ஒரு புதிய கட்சியின் புதியவர்களோடு அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கிறேன்.இதற்கு முன்னர் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், அதற்குப் பிறரு நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியிலும் அங்கத்துவம் வகித்திருக்கிறேன். புல அனுபவங்கள் அந்தக் கட்சிகள் ஊடாக கிடைத்திருக்கின்றன. எமக்கு வாக்களித்த மக்களுக்கு அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு ஓரு நிதியைக் கூட ஒதுக்கிப் பெற்றுக்கொள்வதாக இருந்தால் அதற்குள் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.

ஆனால், இப்போது நான் பயணத்தை ஆரம்பித்திருக்கும் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி அதற்கு மாற்றமாக இருக்கிறது. எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கட்சியின் உயர்மட்டத்திற்கு கொண்டு செல்லும் போது அவர்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.தேர்தலில் வாக்குகளை எடுப்பதற்காக பல பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பும் அளவுக்கு இன்று பிரச்சார மேடைகளில் கூறுகின்றார்கள். தேர்தல் முடிந்த பிறகு வாக்குறுதி தந்தவர்களை காணமுடியாது. ஆனால், எமது கட்சி தேர்தலுக்கு முன்பிருந்தே ஏழை மக்களுக்கான உதவிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை இந்த மக்கள் பெற்றிருந்தாலும், புத்தளத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீரவில்லை. எனவே, அவ்வாறான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு எமது கட்சி இப்போதே தயாராகிவிட்டது.தேர்தல் காலங்களில் வருகின்ற அரசியல் வியாபாரிகளிடமிருந்து புத்தளம் மாவட்ட மக்களை பாதுகாப்பதற்கு ஐக்கிய ஜனநாயக கட்சிதான் பாதுகாப்பை பெற்றுக்கொடுக்கப் போகிறது. புத்தளத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்த எமது பலமான அணி ஒன்று இருக்கிறது. ஆனால், மக்களுடைய ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும்.

கடந்த காலங்களில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கதான் எமது கட்சிக்கு தலைவராக இருக்கிறார். இங்கு அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். எமது கட்சியிலுள்ளவர்கள் மாத்திரமின்றி, பொதுத் தேர்தலில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் எல்லோரும் சுத்தமானவர்கள். ஊழல் செய்யாதவர்கள்.

எனவே, எமது ஐக்கிய ஜனநாயக குரல் கட்சிக்கு புத்தளம் மக்களும் தமது ஒத்துழைப்புக்களை தரவேண்டும். அப்போதுதான் புத்தளம் மாவட்டத்தை புத்தெழுச்சி அடைந்த மாவட்ட மாற்றியமைக்க முடியும் என்றார்.

இதன்போது, ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் உப தலைவர் ஸப்வான் சல்மான் உட்பட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களும் உரையாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





புத்தளம் மக்களின் அனைத்து அபிலாசஷைகளையும் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியால் மாத்திமே நிறைவேற்றமுடியும் - எம்.என்.எம்.நஸ்மி புத்தளம் மாவட்ட மக்களின் அனைத்து அபிலாசஷைகளையும் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியால் மாத்திமே பெற்றுக்கொடுக்கும் முடியும் எனத் தெரிவித்த புத்தளம் நகர சபையின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய ஜனநாயக் குரல் கட்சியின் புத்தளம் மாவட்ட வேட்பாளருமான எம்.என்.எம்.நஸ்மி, முஸ்லிம் காங்கிரஸூம், மக்கள் காங்கிரஸூம் தமது கட்சி அரசியலுக்காக புத்தளம் மாவட்ட மக்களை பெரும்பான்மைக் கட்சிகளுக்கு அடகு வைத்தார்கள் எனவும், அவர்களால்தான் மூன்று தசாப்தங்களுக்கு மேல் புத்தளம் சிறுபான்மை மக்கள் தமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தனர் என்றும் கூறினார்.புத்தளத்தில் உள்ள தனது கட்சி ஆதரவாளர்களுக்கு கட்சியின் அறிமுகம் மற்றும் கொள்கைகளை அறிமுகப்படுத்தும் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு (15)  தனது இல்லத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் உப தலைவர் ஸப்வான் சல்மான் , கட்சியின் புத்தளம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.என்.எம்.ரினோஸ் உட்பட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புத்தளம் மாவட்ட வேட்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜெஸீல், வன்னாத்தவில்லுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுல்தான் மரிக்கார், கருவலகஸ்வௌ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான சம்பத், காமினி சேனாநாயக்க, தொழிலதிபர் முஹம்மது முபாரக் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த புத்தளம் நகர சபையின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய ஜனநாயக் குரல் கட்சியின் புத்தளம் மாவட்ட வேட்பாளருமான எம்.என்.எம்.நஸ்மி மேலும் கூறுகையில், முஸ்லிம் காங்கிரஸூம், மக்கள் காங்கிரஸூம் தேசிய ரீதியில் பெரும்பான்மைக் கட்சிகளுடன் கட்சி அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக, புத்தளம் மக்களை கருவேப்பிலை போலவே இதுவரை காலமும் பயன்படுத்தி வந்துள்ளனர்.நெய்னா மரிக்காருக்குப் பின்னர் புத்தளத்தில் சிறுபான்மை மக்கள் சார்பில் ஒரு பாராளுமன்ற பிரதிநிததித்துவத்தை இல்லாமல் செய்தது இரண்டு சிறுபான்மை கட்சிகள்தான். அதன் பின்னர் புத்தளம் சிறுபான்மை மக்கள் தமது பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை உணர்ந்ததன் விளைவுதான் கடந்த 2020 ஆம் அண்டு பொதுத் தேர்தலில் ஒருவரை எம்.பியாக பெற்றுக்கொண்டனர். ஆனால் அந்த பாராளுமன்ற உறுப்பினரும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவில்லை.புத்தளம் மக்கள் நல்ல மும்மொழி ஆற்றல் உள்ளவர்களை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தலைமைத்துவம், ஆளுமைமிக்க திறமையானவர்களை அனுப்பி வைப்பதன் மூலமே தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியும். புத்தளம் நகர பிதாவாக இருந்து மக்களுக்கு நல்ல பணிகளை முன்னெடுத்திருக்கிறேன். புல அபிவிருத்தி திட்டங்களை செய்திருக்கிறேன்.இந்தப் பொதுத் தேர்தல் பெரும் சவால் என நினைக்கிறார்கள். நாம் பல தேர்தல் மேடைகளை சந்தித்திருக்கிறோம். இந்த பொதுத் தேர்தல் ஒன்றும் எமக்கு சவாலே கிடையாது. ஏனென்றால், இன்று மக்கள் விரும்பு ஒரு புதிய கட்சியின் புதியவர்களோடு அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கிறேன்.இதற்கு முன்னர் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், அதற்குப் பிறரு நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியிலும் அங்கத்துவம் வகித்திருக்கிறேன். புல அனுபவங்கள் அந்தக் கட்சிகள் ஊடாக கிடைத்திருக்கின்றன. எமக்கு வாக்களித்த மக்களுக்கு அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு ஓரு நிதியைக் கூட ஒதுக்கிப் பெற்றுக்கொள்வதாக இருந்தால் அதற்குள் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.ஆனால், இப்போது நான் பயணத்தை ஆரம்பித்திருக்கும் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி அதற்கு மாற்றமாக இருக்கிறது. எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கட்சியின் உயர்மட்டத்திற்கு கொண்டு செல்லும் போது அவர்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.தேர்தலில் வாக்குகளை எடுப்பதற்காக பல பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பும் அளவுக்கு இன்று பிரச்சார மேடைகளில் கூறுகின்றார்கள். தேர்தல் முடிந்த பிறகு வாக்குறுதி தந்தவர்களை காணமுடியாது. ஆனால், எமது கட்சி தேர்தலுக்கு முன்பிருந்தே ஏழை மக்களுக்கான உதவிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறது.ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை இந்த மக்கள் பெற்றிருந்தாலும், புத்தளத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீரவில்லை. எனவே, அவ்வாறான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு எமது கட்சி இப்போதே தயாராகிவிட்டது.தேர்தல் காலங்களில் வருகின்ற அரசியல் வியாபாரிகளிடமிருந்து புத்தளம் மாவட்ட மக்களை பாதுகாப்பதற்கு ஐக்கிய ஜனநாயக கட்சிதான் பாதுகாப்பை பெற்றுக்கொடுக்கப் போகிறது. புத்தளத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்த எமது பலமான அணி ஒன்று இருக்கிறது. ஆனால், மக்களுடைய ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும்.கடந்த காலங்களில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கதான் எமது கட்சிக்கு தலைவராக இருக்கிறார். இங்கு அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். எமது கட்சியிலுள்ளவர்கள் மாத்திரமின்றி, பொதுத் தேர்தலில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் எல்லோரும் சுத்தமானவர்கள். ஊழல் செய்யாதவர்கள்.எனவே, எமது ஐக்கிய ஜனநாயக குரல் கட்சிக்கு புத்தளம் மக்களும் தமது ஒத்துழைப்புக்களை தரவேண்டும். அப்போதுதான் புத்தளம் மாவட்டத்தை புத்தெழுச்சி அடைந்த மாவட்ட மாற்றியமைக்க முடியும் என்றார்.இதன்போது, ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் உப தலைவர் ஸப்வான் சல்மான் உட்பட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களும் உரையாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement