ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில், அவரின் அந்தத் தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலான அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக ஐ.தே.கவின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் குழுவொன்றை நியமிக்கவும் அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பான சகல கலந்துரையாடல்களையும் மேற்குறிப்பிட்ட குழுவினர் முன்னெடுப்பரென்று ஐக்கிய தேசியக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைவு; பேச்சுவார்த்தைக்கு சஜித் இணக்கம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.இந்நிலையில், அவரின் அந்தத் தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலான அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக ஐ.தே.கவின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் குழுவொன்றை நியமிக்கவும் அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.இதுதொடர்பான சகல கலந்துரையாடல்களையும் மேற்குறிப்பிட்ட குழுவினர் முன்னெடுப்பரென்று ஐக்கிய தேசியக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.