களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் நேற்று இரவு திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மொனராகலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சமூக விஞ்ஞான பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க அம்புலன்ஸ் வசதியோ அல்லது வேறு வாகனமோ பல்கலைக்கழகத்தில் இல்லாத காரணத்தினால்,
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும் விடுதி நிர்வாக அதிகாரியின் கவனக்குறைவால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக சுமார் 150 மாணவர்கள் இன்று காலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி பல்கலை மாணவன் திடீர் மரணம். பல்கலைக்கழகம் முன் போராட்டத்தில் குதித்த மாணவர்கள் களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் நேற்று இரவு திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மொனராகலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சமூக விஞ்ஞான பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க அம்புலன்ஸ் வசதியோ அல்லது வேறு வாகனமோ பல்கலைக்கழகத்தில் இல்லாத காரணத்தினால், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.மேலும் விடுதி நிர்வாக அதிகாரியின் கவனக்குறைவால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக சுமார் 150 மாணவர்கள் இன்று காலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.