• Jun 30 2024

ஜனாதிபதியின் விசேட உரையை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பரிமாறி கொண்டாடிய ஐ.தே.க.?

Chithra / Jun 27th 2024, 8:19 am
image

Advertisement

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றியிருந்த நிலையில் நாட்டின் வெவ்வேறு இடங்களில் பட்டாசு கொளுத்தப்பட்டு கொண்டாடப்பட்டதாக தெரியவருகின்றது.

ஜனாதிபதியின் உரையை வரவேற்று இவ்வாறு பட்டாசு கொளுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டாரகம, மாலம்பே மற்றும் காலி போன்ற இடங்களில் அதிகளவில் பட்டாசு கொளுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமைகள், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த உரையின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் இவ்வாறு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் பாற்சோறு பரிமாறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஜனாதிபதியின் விசேட உரையை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பரிமாறி கொண்டாடிய ஐ.தே.க.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றியிருந்த நிலையில் நாட்டின் வெவ்வேறு இடங்களில் பட்டாசு கொளுத்தப்பட்டு கொண்டாடப்பட்டதாக தெரியவருகின்றது.ஜனாதிபதியின் உரையை வரவேற்று இவ்வாறு பட்டாசு கொளுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.பண்டாரகம, மாலம்பே மற்றும் காலி போன்ற இடங்களில் அதிகளவில் பட்டாசு கொளுத்தப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதார நிலைமைகள், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தகவல் வெளியிட்டிருந்தார்.இந்த உரையின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் இவ்வாறு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் பாற்சோறு பரிமாறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement