நுவரெலியாவில் இன்று பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனுடன் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நுவரெலியா முழுவதும் அதிகாலை நேரங்களில் தொடர்ந்து கடும் துகள் உறைபனி சூழல் நிலவி வருகிறது.
இந்த துகள் பனிப்பொழிவின் காரணமாக மலையக மரக்கறி பயிர்ச்செய்கை, மலர் உற்பத்தி மற்றும் தேயிலைப் பயிர்ச்செய்கை ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளதால், அவர்களின் வருகை எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.
குறிப்பாக நுவரெலியா குதிரைப் பந்தயத் திடல், கிரகரி வாவி கரையோரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் துகள் உறைபனி காணப்படுகிறது.
இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலை நேரங்களில் நேரில் பார்வையிட்டு, புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.
இதேவேளை இன்று (23) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இன்று அதிகாலை பண்டாரவளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 12.5 பாகை செல்சியஸும், பதுளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.8 பாகை செல்சியஸும் பதிவாகியுள்ளது.
மேலும், மஹாஇலுப்பள்ளம பகுதியில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 பாகை செல்சியஸ் ஆகும். யாழ்ப்பாணத்திலும் குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் வரலாறு காணாத துகள் உறைபனி பொழிவு நுவரெலியாவில் இன்று பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனுடன் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக நுவரெலியா முழுவதும் அதிகாலை நேரங்களில் தொடர்ந்து கடும் துகள் உறைபனி சூழல் நிலவி வருகிறது.இந்த துகள் பனிப்பொழிவின் காரணமாக மலையக மரக்கறி பயிர்ச்செய்கை, மலர் உற்பத்தி மற்றும் தேயிலைப் பயிர்ச்செய்கை ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளதால், அவர்களின் வருகை எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.குறிப்பாக நுவரெலியா குதிரைப் பந்தயத் திடல், கிரகரி வாவி கரையோரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் துகள் உறைபனி காணப்படுகிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலை நேரங்களில் நேரில் பார்வையிட்டு, புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.இதேவேளை இன்று (23) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று அதிகாலை பண்டாரவளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 12.5 பாகை செல்சியஸும், பதுளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.8 பாகை செல்சியஸும் பதிவாகியுள்ளது. மேலும், மஹாஇலுப்பள்ளம பகுதியில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 பாகை செல்சியஸ் ஆகும். யாழ்ப்பாணத்திலும் குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.