உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே இதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து உயர்தர பரீட்சார்த்திகளையும் தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தமக்கு வழங்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் தவிர்ந்த வேறு பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுவதாயின் அது குறித்து பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நேற்றைய தினம் ஆரம்பமானது.
குறித்த பரீட்சையானது அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இதன்படி இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 33,185 பரீட்ச்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அவசர அறிவித்தல். உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே இதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இது குறித்து அனைத்து உயர்தர பரீட்சார்த்திகளையும் தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.மேலும் தமக்கு வழங்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் தவிர்ந்த வேறு பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுவதாயின் அது குறித்து பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நேற்றைய தினம் ஆரம்பமானது.குறித்த பரீட்சையானது அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.இதன்படி இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 33,185 பரீட்ச்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.