• Dec 27 2024

உயர்தர பரிட்சை தொடர்பில் அவசர அறிவிப்பு -மேலதிக பொறுப்பதிகாரிகள் நியமனம்..!samugammedia

mathuri / Jan 7th 2024, 10:35 pm
image

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2,302 பரீட்சை நிலையங்களில் உயர்தர பரீட்சை நிலையங்களில் ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பமானது. கடந்த 04 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை  உயர்தர பரீட்சை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பரீட்சைக்கு 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர், அவர்களில் 281,445 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள். தனியார் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 65,531 என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அடையாளம் காணப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையங்களில், மோசடிகளை தடுக்கும் நோக்கில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சை தொடர்பில் இதுவரையில் பரீட்சை முறைகேடுகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக கல்கிரியாகம மற்றும் மனம்பிட்டியவில் அமைக்கப்பட்ட  2 விசேட பரீட்சை நிலையங்கள் தொடர்ந்தும் இயங்குகின்றன.

கல்கிரியாகம மத்திய மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் 37 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 

மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் 129 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாக லசிக சமரகோன் மேலும் குறிப்பிட்டார்.


உயர்தர பரிட்சை தொடர்பில் அவசர அறிவிப்பு -மேலதிக பொறுப்பதிகாரிகள் நியமனம்.samugammedia 2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2,302 பரீட்சை நிலையங்களில் உயர்தர பரீட்சை நிலையங்களில் ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பமானது. கடந்த 04 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை  உயர்தர பரீட்சை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு பரீட்சைக்கு 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர், அவர்களில் 281,445 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள். தனியார் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 65,531 என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், அடையாளம் காணப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையங்களில், மோசடிகளை தடுக்கும் நோக்கில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சை தொடர்பில் இதுவரையில் பரீட்சை முறைகேடுகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக கல்கிரியாகம மற்றும் மனம்பிட்டியவில் அமைக்கப்பட்ட  2 விசேட பரீட்சை நிலையங்கள் தொடர்ந்தும் இயங்குகின்றன.கல்கிரியாகம மத்திய மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் 37 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் 129 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாக லசிக சமரகோன் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement