• May 26 2026

கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை - நிரம்பி வழியும் நீர்தேக்கங்கள்

Chithra / May 26th 2026, 8:06 pm
image

வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பிராந்தியங்களில் அடுத்த மூன்று நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமை எதிர்பார்க்கப்படுவதால், கடற்றொழிலாளர்களும் கடற்படைச் சமூகத்தினரும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, 

இக்காலப்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40 - 50 கிலோமீற்றர் வரை காணப்படும் என்பதுடன், அவ்வப்போது மணிக்கு 60 கிலோமீற்றர் வரை வீசக்கூடும். இதன் காரணமாக இக்கடல் பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.


மேலும், சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 - 60 கிலோமீற்றர் வரையும், சில வேளைகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரையும் அதிகரித்து வீசக்கூடும் என்பதால் கடல் பகுதிகள் மிகக் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


எனவே, கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் தத்தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

இந்நிலையில் 

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்ச்சியான கனமழையால் நீர்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து, அவற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக நிலவிவரும் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள முக்கிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் நிலவிய கடுமையான வெப்பமான காலநிலையால் பல நீர் தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்திருந்தது.


தேசிய நீர்மின் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், மவுஸ்சாகலை நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவை எட்ட இன்னும் 29 அடி நீர் தேவைப்படுவதாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு 27.05 அடி நீர் தேவைப்படுவதாகவும் கூறினார்.


அதேபோல், விமல் சுரேந்திர மற்றும் கென்யோன் நீர் தேக்கங்களுக்கு தலா 9 அடி நீர் மேலும் தேவைப்படுவதாகவும், லக்சபான நீர் தேக்கத்திற்கு இன்னும் 8 அடி நீர் நிரம்ப வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும், மேல் கொத்மலை நீர் தேக்கம் அதன் முழு கொள்ளளவை எட்ட இன்னும் 2 மீட்டரும், கொத்மலை நீர் தேக்கத்திற்கு 18 மீட்டர் நீரும் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


மத்திய மலைநாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதாகவும், இதன் விளைவாக நீர்மின் உற்பத்தியும் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை - நிரம்பி வழியும் நீர்தேக்கங்கள் வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பிராந்தியங்களில் அடுத்த மூன்று நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமை எதிர்பார்க்கப்படுவதால், கடற்றொழிலாளர்களும் கடற்படைச் சமூகத்தினரும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, இக்காலப்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40 - 50 கிலோமீற்றர் வரை காணப்படும் என்பதுடன், அவ்வப்போது மணிக்கு 60 கிலோமீற்றர் வரை வீசக்கூடும். இதன் காரணமாக இக்கடல் பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.மேலும், சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 - 60 கிலோமீற்றர் வரையும், சில வேளைகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரையும் அதிகரித்து வீசக்கூடும் என்பதால் கடல் பகுதிகள் மிகக் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.எனவே, கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் தத்தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்ச்சியான கனமழையால் நீர்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து, அவற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக நிலவிவரும் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள முக்கிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் நிலவிய கடுமையான வெப்பமான காலநிலையால் பல நீர் தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்திருந்தது.தேசிய நீர்மின் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், மவுஸ்சாகலை நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவை எட்ட இன்னும் 29 அடி நீர் தேவைப்படுவதாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு 27.05 அடி நீர் தேவைப்படுவதாகவும் கூறினார்.அதேபோல், விமல் சுரேந்திர மற்றும் கென்யோன் நீர் தேக்கங்களுக்கு தலா 9 அடி நீர் மேலும் தேவைப்படுவதாகவும், லக்சபான நீர் தேக்கத்திற்கு இன்னும் 8 அடி நீர் நிரம்ப வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், மேல் கொத்மலை நீர் தேக்கம் அதன் முழு கொள்ளளவை எட்ட இன்னும் 2 மீட்டரும், கொத்மலை நீர் தேக்கத்திற்கு 18 மீட்டர் நீரும் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.மத்திய மலைநாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதாகவும், இதன் விளைவாக நீர்மின் உற்பத்தியும் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement