• Jul 31 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி

Ziya / Jul 30th 2026, 9:28 am
image

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய “கடுமையான தாக்குதல் அலை” நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.


நேற்று ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. 


மேலும், ஈரானில் இருந்து ஏவப்பட்ட தாக்குதல் முழுமையாக இடைமறிக்கப்பட்டதாகவும் அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், சுமார் 50,000 அமெரிக்கப் படையினர் தொடர்ந்து பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டு, எந்தவொரு அடுத்தகட்ட நடவடிக்கைக்கும் தயாராக உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனால் அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தெஹ்ரானுக்கு அமெரிக்கா விடுக்கும் அடுத்த எச்சரிக்கை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி ஈரான் மீது அமெரிக்கா நடத்திய “கடுமையான தாக்குதல் அலை” நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.நேற்று ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும், ஈரானில் இருந்து ஏவப்பட்ட தாக்குதல் முழுமையாக இடைமறிக்கப்பட்டதாகவும் அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.இதற்கிடையில், சுமார் 50,000 அமெரிக்கப் படையினர் தொடர்ந்து பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டு, எந்தவொரு அடுத்தகட்ட நடவடிக்கைக்கும் தயாராக உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தெஹ்ரானுக்கு அமெரிக்கா விடுக்கும் அடுத்த எச்சரிக்கை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement