ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடவடிக்கை மேலும் தீவிரமடைந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 5ஆம் தேதி நிலவரப்படி, அமெரிக்கப் படைகள் 130 வர்த்தகக் கப்பல்களை திசைதிருப்பியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஈரானின் துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் கப்பல்களுக்கு எதிரான அமெரிக்க கடற்படை முற்றுகையை அமல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையின் தகவலின்படி, ஈரான் தொடர்பான கடற்படை முற்றுகை நடவடிக்கை ஜூலை 14ஆம் தேதி மீண்டும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.
அதன் பின்னர், முற்றுகை விதிகளைப் பின்பற்றாத 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், கடந்த 12 வாரங்களில் மேலும் 13 வர்த்தகக் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பல்கள் முற்றுகையை மீறியதாகவோ அல்லது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடையதாக அமெரிக்கா கூறும் கடத்தல் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததாகவோ அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை உலகின் முக்கியமான எரிசக்தி கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் அதனை அண்மித்த கடற்பகுதிகளில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
ஓமன் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியை அணுகும் கப்பல்கள் அமெரிக்க கடற்படையின் அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணிக்கவும், அவசர கடல்சார் தொடர்பு வழிமுறைகள் மூலம் அமெரிக்க கடற்படையுடன் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஹோர்முஸ் பகுதியில் வர்த்தகக் கப்பல்களுக்கு எதிரான புதிய பாதுகாப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தொடரும் நிலையில், ஈரானுடனான மோதல் எப்போது முடிவுக்கு வரும், ஹோர்முஸ் வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்து எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பது தற்போது முக்கிய கேள்வியாகியுள்ளது.
ஈரானை சுற்றிவளைத்த அமெரிக்கா- 130 கப்பல்களுக்கு புதிய கட்டுப்பாடு ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடவடிக்கை மேலும் தீவிரமடைந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.அக்டோபர் 5ஆம் தேதி நிலவரப்படி, அமெரிக்கப் படைகள் 130 வர்த்தகக் கப்பல்களை திசைதிருப்பியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஈரானின் துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் கப்பல்களுக்கு எதிரான அமெரிக்க கடற்படை முற்றுகையை அமல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது.அமெரிக்க மத்திய கட்டளையின் தகவலின்படி, ஈரான் தொடர்பான கடற்படை முற்றுகை நடவடிக்கை ஜூலை 14ஆம் தேதி மீண்டும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.அதன் பின்னர், முற்றுகை விதிகளைப் பின்பற்றாத 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், கடந்த 12 வாரங்களில் மேலும் 13 வர்த்தகக் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. அந்தக் கப்பல்கள் முற்றுகையை மீறியதாகவோ அல்லது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடையதாக அமெரிக்கா கூறும் கடத்தல் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததாகவோ அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கை உலகின் முக்கியமான எரிசக்தி கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் அதனை அண்மித்த கடற்பகுதிகளில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.ஓமன் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியை அணுகும் கப்பல்கள் அமெரிக்க கடற்படையின் அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணிக்கவும், அவசர கடல்சார் தொடர்பு வழிமுறைகள் மூலம் அமெரிக்க கடற்படையுடன் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.இதற்கிடையில், ஹோர்முஸ் பகுதியில் வர்த்தகக் கப்பல்களுக்கு எதிரான புதிய பாதுகாப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன.அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தொடரும் நிலையில், ஈரானுடனான மோதல் எப்போது முடிவுக்கு வரும், ஹோர்முஸ் வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்து எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பது தற்போது முக்கிய கேள்வியாகியுள்ளது.