அமெரிக்காவின் 'எண்ணெய் தடை விலக்கு' கெடு முடிந்த சில மணிநேரங்களிலேயே, அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியக் கொடி ஏற்றிய எம்/வி டூஸ்கா (M/V Duska) என்ற கப்பலை அமெரிக்கக் கடற்படையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.
அதிநவீன ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் மற்றும் நீர்நிலத் தாக்குதல் கப்பல்கள் உதவியுடன் இந்த ஆபரேஷன் அரங்கேறியுள்ளது.
ஏப்ரல் 19-க்குப் பிறகு ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், டூஸ்கா கப்பல் தடையை மீறிச் சென்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
தற்போது அதன் சரக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரானிய வர்த்தகக் கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.
ஈரானியக் கொடி ஏற்றிய கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் சிறைபிடிக்கப்பட்டிருப்பது, ஈரானின் இறையாண்மை மீதான நேரடித் தாக்குதலாக தெஹ்ரான் கருதுகிறது.
இதற்குப் பதிலடியாக ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடப்போவதாக ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், வளைகுடாப் பகுதியில் எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது.
நடுக்கடலில் ஈரானிய கப்பல் சிறைபிடிப்பு-அமெரிக்கக் கடற்படை அதிரடி அமெரிக்காவின் 'எண்ணெய் தடை விலக்கு' கெடு முடிந்த சில மணிநேரங்களிலேயே, அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியக் கொடி ஏற்றிய எம்/வி டூஸ்கா (M/V Duska) என்ற கப்பலை அமெரிக்கக் கடற்படையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். அதிநவீன ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் மற்றும் நீர்நிலத் தாக்குதல் கப்பல்கள் உதவியுடன் இந்த ஆபரேஷன் அரங்கேறியுள்ளது.ஏப்ரல் 19-க்குப் பிறகு ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், டூஸ்கா கப்பல் தடையை மீறிச் சென்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.தற்போது அதன் சரக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானிய வர்த்தகக் கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.ஈரானியக் கொடி ஏற்றிய கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் சிறைபிடிக்கப்பட்டிருப்பது, ஈரானின் இறையாண்மை மீதான நேரடித் தாக்குதலாக தெஹ்ரான் கருதுகிறது.இதற்குப் பதிலடியாக ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடப்போவதாக ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், வளைகுடாப் பகுதியில் எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது.