இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பெருமளவான பதவிகளுக்கு வெற்றிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல்நிலை, இடைநிலை மற்றும் கடைநிலை என்ற பகுதிக்குள்ளான வெற்றிடங்கள் அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியாளர் பற்றாக்குறையால் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் 2023 செயல்திறன் அறிக்கையில், 2023 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி, திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் பட்டியல் 1,295 ஆகும்.
எனினும் அந்த பதவிகளில் 671 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதனால் 624 வெற்றிடங்கள் உள்ளன.
இது திணைக்களத்தின் பணியாளர்களில் 48வீதமாகும் இந்தநிலையில், குறித்த பணியாளர் வெற்றிடங்கள், திணைக்களத்தின் செயல்திறனை நேரடியாகப் பாதித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் பெருமளவான பதவிகளுக்கு வெற்றிடங்கள் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பெருமளவான பதவிகளுக்கு வெற்றிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் முதல்நிலை, இடைநிலை மற்றும் கடைநிலை என்ற பகுதிக்குள்ளான வெற்றிடங்கள் அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.பணியாளர் பற்றாக்குறையால் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.சட்டமா அதிபர் திணைக்களத்தின் 2023 செயல்திறன் அறிக்கையில், 2023 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி, திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் பட்டியல் 1,295 ஆகும்.எனினும் அந்த பதவிகளில் 671 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதனால் 624 வெற்றிடங்கள் உள்ளன.இது திணைக்களத்தின் பணியாளர்களில் 48வீதமாகும் இந்தநிலையில், குறித்த பணியாளர் வெற்றிடங்கள், திணைக்களத்தின் செயல்திறனை நேரடியாகப் பாதித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.