வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் நிதிப் பங்களிப்புடன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026” சிறப்பாக நடைபெற்றது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் சண்டிலிப்பாய் பிரான்பற்று அருள்முதீஸ்வரி திருமண மண்டபத்தில் “அண்ணாவியார் கலாபூஷணம் சிங்கராயர் செபமாலை” அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜாவும், கௌரவ விருந்தினராக கலாசார பேரவையின் போஷகரும் முன்னாள் அதிபருமான திரு. வரதராஜசர்மா ஸ்ரீகாந்தன் அவர்களும் கலந்துக்கொண்டனர்.
பண்பாட்டுப் பேரணி, மங்கள விளக்கேற்றல் மற்றும் தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பமான விழாவில், மாணிப்பாய் கலைக்கோவில் மாணவிகளின் நாட்டிய நிகழ்வு, பாரம்பரிய இசைச் சங்கமம், சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலைய மாணவிகளின் நடன நிகழ்வு, சிவலிங்க தற்காப்புக் கலை மன்றத்தின் சிலம்பாட்டம், சண்டிலிப்பாய் அம்பாள் கலைமன்றத்தின் “காத்தவராயன் சிந்துநடைக் கூத்து” அரங்கேற்றப்பட்டதோடு, பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
விழாவின் முக்கிய அம்சமாக, வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தின் கலை மற்றும் பண்பாட்டுத் துறைக்கு நீண்டகாலமாகப் பங்களிப்பு செய்த மூத்த மற்றும் இளம் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
அத்துடன், கலைமன்றங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
பிரதேசத்தின் பாரம்பரிய கலைகள், பண்பாட்டு மரபுகள் மற்றும் நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பண்பாட்டுப் பெருவிழாவில் பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளுடன் வலிகாமம் தென்மேற்கு பண்பாட்டுப் பெருவிழா வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் நிதிப் பங்களிப்புடன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026” சிறப்பாக நடைபெற்றது.வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் சண்டிலிப்பாய் பிரான்பற்று அருள்முதீஸ்வரி திருமண மண்டபத்தில் “அண்ணாவியார் கலாபூஷணம் சிங்கராயர் செபமாலை” அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜாவும், கௌரவ விருந்தினராக கலாசார பேரவையின் போஷகரும் முன்னாள் அதிபருமான திரு. வரதராஜசர்மா ஸ்ரீகாந்தன் அவர்களும் கலந்துக்கொண்டனர்.பண்பாட்டுப் பேரணி, மங்கள விளக்கேற்றல் மற்றும் தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பமான விழாவில், மாணிப்பாய் கலைக்கோவில் மாணவிகளின் நாட்டிய நிகழ்வு, பாரம்பரிய இசைச் சங்கமம், சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலைய மாணவிகளின் நடன நிகழ்வு, சிவலிங்க தற்காப்புக் கலை மன்றத்தின் சிலம்பாட்டம், சண்டிலிப்பாய் அம்பாள் கலைமன்றத்தின் “காத்தவராயன் சிந்துநடைக் கூத்து” அரங்கேற்றப்பட்டதோடு, பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.விழாவின் முக்கிய அம்சமாக, வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தின் கலை மற்றும் பண்பாட்டுத் துறைக்கு நீண்டகாலமாகப் பங்களிப்பு செய்த மூத்த மற்றும் இளம் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.அத்துடன், கலைமன்றங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.பிரதேசத்தின் பாரம்பரிய கலைகள், பண்பாட்டு மரபுகள் மற்றும் நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பண்பாட்டுப் பெருவிழாவில் பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.