பஸ்ஸில் இருந்த இரு இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் பெறுமதிமிக்க பயணப் பொதியைத் திருடிய சந்தேகநபர் ஒருவரைக் குடாஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அவிசாவளை, ஹேவாயின்ன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் மேற்படி சுற்றுலாப் பயணிகள் இருவரும் பஸ்ஸில் பயணித்தபோது, தேநீர் அருந்துவதற்காக மொனராகலை - குடாஓயா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பயணிகள் தமது பொதியை ஆசனத்தில் வைத்துவிட்டு உணவகத்திற்குச் சென்றதைச் சாதகமாகப் பயன்படுத்திய சந்தேகநபர், அதனைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமரா காட்சிகளைப் பொலிஸார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் விசாரணைகளைத் தீவிரப்படுத்திய பொலிஸாருக்கு, சந்தேகநபர் கண்டி - கதிர்காமம் நோக்கிப் பயணிக்கும் மற்றுமொரு பஸ்ஸில் செல்வதாகத் தகவல் கிடைத்தது.
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் குழுவினர், குடாஓயா பகுதியில் வைத்து அந்த பஸ்ஸை வழிமறித்துச் சோதனை செய்து சந்தேகநபரைக் கைது செய்தனர்.
சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட இரண்டு மடிக்கணினிகள, ஒரு ஐபாட் உள்ளிட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து குடாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் பெறுமதியான பொருள்கள் திருட்டு இலங்கை இளைஞனின் அதிர்ச்சிச் செயல் பஸ்ஸில் இருந்த இரு இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் பெறுமதிமிக்க பயணப் பொதியைத் திருடிய சந்தேகநபர் ஒருவரைக் குடாஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அவிசாவளை, ஹேவாயின்ன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நேற்றுமுன்தினம் மேற்படி சுற்றுலாப் பயணிகள் இருவரும் பஸ்ஸில் பயணித்தபோது, தேநீர் அருந்துவதற்காக மொனராகலை - குடாஓயா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது, பயணிகள் தமது பொதியை ஆசனத்தில் வைத்துவிட்டு உணவகத்திற்குச் சென்றதைச் சாதகமாகப் பயன்படுத்திய சந்தேகநபர், அதனைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார்.பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமரா காட்சிகளைப் பொலிஸார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் விசாரணைகளைத் தீவிரப்படுத்திய பொலிஸாருக்கு, சந்தேகநபர் கண்டி - கதிர்காமம் நோக்கிப் பயணிக்கும் மற்றுமொரு பஸ்ஸில் செல்வதாகத் தகவல் கிடைத்தது.உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் குழுவினர், குடாஓயா பகுதியில் வைத்து அந்த பஸ்ஸை வழிமறித்துச் சோதனை செய்து சந்தேகநபரைக் கைது செய்தனர்.சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட இரண்டு மடிக்கணினிகள, ஒரு ஐபாட் உள்ளிட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.இந்தச் சம்பவம் குறித்து குடாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.