வல்வெட்டித்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விருந்தினர் விடுதி ஒன்றின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதம் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த விடுதி, வல்வெட்டித்துறை நகர சபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மதுவரித் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் சட்ட வரையறைகளுக்கு உட்படாமல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், கரையோரப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கடலுக்குள் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் ஒரு வருடத்துக்கும் மேலாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூட்டத்தில் பலரும் குற்றஞ்சாட்டினர்.
இதேவேளை, வல்லிபுரக் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு 25 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த இடம் தொடர்பிலும் கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதனையடுத்து, பிரதேச மக்களுடன் இணைந்து குறித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, இந்திய முதலீட்டுத் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.
வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம், அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் நேற்று காலை 9.45 மணியளவில் ஆரம்பமானது.
இதன்போது வீதி அமைப்பது தொடர்பான அனுமதிகள், எல்லை நிர்ணயம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், சில விடயங்களை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன், பருத்தித்துறை அஞ்சல் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியிலிருந்து இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுப்பது தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன், ஆனைவிழுந்தான் பகுதியில் நீதிமன்றத்துக்கு காணி வழங்குவது தொடர்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு மேலதிகமாகவும் பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நேற்றைய கூட்டத்தில் அரச திணைக்கள அதிகாரிகள், பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் செயலாளர், வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் செயலாளர், பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள், கிராம மட்ட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், இராணுவம், காவல்துறை மற்றும் கடற்படையின் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
வல்வெட்டித்துறை சட்டவிரோத விடுதி விவகாரம் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நீண்ட நேரம் சர்ச்சை வல்வெட்டித்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விருந்தினர் விடுதி ஒன்றின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதம் இடம்பெற்றுள்ளது.வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த விடுதி, வல்வெட்டித்துறை நகர சபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மதுவரித் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் சட்ட வரையறைகளுக்கு உட்படாமல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும், கரையோரப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கடலுக்குள் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த விடயம் ஒரு வருடத்துக்கும் மேலாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூட்டத்தில் பலரும் குற்றஞ்சாட்டினர்.இதேவேளை, வல்லிபுரக் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு 25 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.குறித்த இடம் தொடர்பிலும் கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது.இதனையடுத்து, பிரதேச மக்களுடன் இணைந்து குறித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, இந்திய முதலீட்டுத் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம், அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் நேற்று காலை 9.45 மணியளவில் ஆரம்பமானது.இதன்போது வீதி அமைப்பது தொடர்பான அனுமதிகள், எல்லை நிர்ணயம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.மேலும், சில விடயங்களை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன், பருத்தித்துறை அஞ்சல் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியிலிருந்து இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுப்பது தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்பட்டது.அத்துடன், ஆனைவிழுந்தான் பகுதியில் நீதிமன்றத்துக்கு காணி வழங்குவது தொடர்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கு மேலதிகமாகவும் பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.நேற்றைய கூட்டத்தில் அரச திணைக்கள அதிகாரிகள், பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் செயலாளர், வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் செயலாளர், பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள், கிராம மட்ட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அத்துடன், இராணுவம், காவல்துறை மற்றும் கடற்படையின் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.