• Jun 27 2026

வவுனியாவில் வேன் – மோட்டார் சைக்கிள் விபத்து.! இருவர் படுகாயம்

Aathira / Jun 27th 2026, 10:46 am
image

வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து நேற்று (26.06.2026) மாலை 4.30 மணியளவில் ஈரட்டைபெரியகுளம் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

ஏ9 வீதியில் பயணித்த HJ-1344 பதிவு இலக்க வேனும், BGV-5555 பதிவு இலக்க மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

மோதலின் தாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளனர்.

உடனடியாக மீட்கப்பட்ட இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் ஈரட்டைபெரியகுளம் போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சம்பவத்தில் தொடர்புடைய வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

வவுனியாவில் வேன் – மோட்டார் சைக்கிள் விபத்து. இருவர் படுகாயம் வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து நேற்று (26.06.2026) மாலை 4.30 மணியளவில் ஈரட்டைபெரியகுளம் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.ஏ9 வீதியில் பயணித்த HJ-1344 பதிவு இலக்க வேனும், BGV-5555 பதிவு இலக்க மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோதலின் தாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளனர்.உடனடியாக மீட்கப்பட்ட இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பில் ஈரட்டைபெரியகுளம் போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சம்பவத்தில் தொடர்புடைய வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement