• Aug 08 2026

புலத்சிங்களில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 14 பேர் காயம்

dorin / Aug 7th 2026, 11:25 am
image

புலத்சிங்கள, உடுகலகந்த அமரகெதர பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து இன்று (7) காலை இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொழிற்சாலை ஒன்றிற்காக ஊழியர்களை ஏற்றி உடுகலகந்த பகுதியில் இருந்து சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

காயமடைந்தவர்களில் 6 பேர் ஹொரணை மாவட்டவைத்தியசாலையிலும், 8 பேர் புலத்சிங்கள பிரதேச வைத்தியசாலையிலும்அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 பேர் பெண்கள் அடங்குவதுடன், சாரதி உட்பட மேலும் இரு ஆண்கள் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

காயமடைந்தவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புலத்சிங்களில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 14 பேர் காயம் புலத்சிங்கள, உடுகலகந்த அமரகெதர பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து இன்று (7) காலை இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை ஒன்றிற்காக ஊழியர்களை ஏற்றி உடுகலகந்த பகுதியில் இருந்து சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 6 பேர் ஹொரணை மாவட்டவைத்தியசாலையிலும், 8 பேர் புலத்சிங்கள பிரதேச வைத்தியசாலையிலும்அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 பேர் பெண்கள் அடங்குவதுடன், சாரதி உட்பட மேலும் இரு ஆண்கள் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காயமடைந்தவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement