ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது அவருக்கு எதிராக போராட்டம் இடம்பெறலாம் என்ற சந்தேகத்தில் வவுனியாவில் சிலருக்கு நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
வவுனியாவிற்கான அபிவிருத்தி குழு கூட்டத்தினை நடத்துவதற்கு நாளைய வவுனியா மாவட்ட செயலகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செல்லவுள்ளார்.
இதன்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் வவுனியாவை சேர்ந்த சிலருக்கு நீதிமன்றத்தினூடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த தடை உத்தரவானது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களைச் சேர்ந்த கோ.ராஜ்குமார், கா.ஜெயவனிதா, ஜெனிற்றா, சரோஜினிதேவி மற்றும் முன்னாள் முன்னாள் அரசியல் கைதியும் போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவருமான அரவிந்தன் ஆகியோருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவு பொலிஸாரால் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு: வவுனியாவில் 5 பேருக்குத் தடை உத்தரவு ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது அவருக்கு எதிராக போராட்டம் இடம்பெறலாம் என்ற சந்தேகத்தில் வவுனியாவில் சிலருக்கு நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.வவுனியாவிற்கான அபிவிருத்தி குழு கூட்டத்தினை நடத்துவதற்கு நாளைய வவுனியா மாவட்ட செயலகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செல்லவுள்ளார்.இதன்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் வவுனியாவை சேர்ந்த சிலருக்கு நீதிமன்றத்தினூடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.அதனடிப்படையில் குறித்த தடை உத்தரவானது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களைச் சேர்ந்த கோ.ராஜ்குமார், கா.ஜெயவனிதா, ஜெனிற்றா, சரோஜினிதேவி மற்றும் முன்னாள் முன்னாள் அரசியல் கைதியும் போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவருமான அரவிந்தன் ஆகியோருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தத் தடை உத்தரவு பொலிஸாரால் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.