• Apr 16 2026

வவுனியா, யாழில் அதிகபட்ச வெப்பநிலை - 21 மாவட்டங்களில் நாளை உச்சம் தொடும்

Chithra / Apr 16th 2026, 8:37 pm
image

 


இன்று அதிகபட்ச வெப்பநிலையான 36.1 பாகை செல்சியஸ் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 

இதேவேளை நாட்டின் 21 மாவட்டங்களில் நாளை மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவுறுத்தலின்படி, 


வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திலும் இந்த வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வெப்பச் சுட்டெண் அதிகரிப்பதன் காரணமாக, நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு அதிக உடல் சோர்வு ஏற்படக்கூடும்.


அத்துடன், இக்காலப்பகுதியில் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதனால் அதிகமாக வெளியில் இருப்பதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா, யாழில் அதிகபட்ச வெப்பநிலை - 21 மாவட்டங்களில் நாளை உச்சம் தொடும்  இன்று அதிகபட்ச வெப்பநிலையான 36.1 பாகை செல்சியஸ் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதேவேளை நாட்டின் 21 மாவட்டங்களில் நாளை மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவுறுத்தலின்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திலும் இந்த வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெப்பச் சுட்டெண் அதிகரிப்பதன் காரணமாக, நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு அதிக உடல் சோர்வு ஏற்படக்கூடும்.அத்துடன், இக்காலப்பகுதியில் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதனால் அதிகமாக வெளியில் இருப்பதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement