• Sep 20 2024

70 வீத பிரச்சனைகளுடன் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி இயங்குகின்றது- திலீபன் எம்.பி! samugammedia

Tamil nila / Jun 28th 2023, 6:27 pm
image

Advertisement

70 வீதமான பிரச்சனைகளுடனேயே வவுனியா தேசிய கல்வியில் கல்லூரி இயங்குகின்றது என வன்னி பாராளுன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு. திலீபன் தெரிவித்தார்.

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் ஏற்பட்டுள்ள வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

அபிவிருத்தி குழு கூட்டங்களில் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி தொடர்பாக ஒவ்வொரு முறையும் கதைக்கப்படுகின்றது. ஆனால் வந்து பார்த்தபோது தான் தெரிகின்றது. 70 வீதமான பிரச்சனைகளோடு இக்கல்லூரி இயங்கி வருகின்றது.

போக்குவரத்து வசதியின்மை, குடிநீர்ப்பிரச்சனை, கட்டிடங்கள் எல்லாம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்தவகையிலும் கல்வியியல் கல்லூரியை இயக்கும் முதல்வருக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் நன்றியை கூறவேண்டும்.

நான் விரைவாக அமைச்சரை சந்தித்து உடனடியாக செய்யக்கூடிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்தார். 


70 வீத பிரச்சனைகளுடன் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி இயங்குகின்றது- திலீபன் எம்.பி samugammedia 70 வீதமான பிரச்சனைகளுடனேயே வவுனியா தேசிய கல்வியில் கல்லூரி இயங்குகின்றது என வன்னி பாராளுன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு. திலீபன் தெரிவித்தார்.வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் ஏற்பட்டுள்ள வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,அபிவிருத்தி குழு கூட்டங்களில் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி தொடர்பாக ஒவ்வொரு முறையும் கதைக்கப்படுகின்றது. ஆனால் வந்து பார்த்தபோது தான் தெரிகின்றது. 70 வீதமான பிரச்சனைகளோடு இக்கல்லூரி இயங்கி வருகின்றது.போக்குவரத்து வசதியின்மை, குடிநீர்ப்பிரச்சனை, கட்டிடங்கள் எல்லாம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்தவகையிலும் கல்வியியல் கல்லூரியை இயக்கும் முதல்வருக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் நன்றியை கூறவேண்டும்.நான் விரைவாக அமைச்சரை சந்தித்து உடனடியாக செய்யக்கூடிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement