• May 14 2026

கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்த வவுனியா வடக்கு பிரதேச சபை அதிரடி நடவடிக்கை!

shanu / May 14th 2026, 10:33 am
image

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்து ஒழுங்குமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில், வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளைக் கையகப்படுத்தும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


வீதிகளில் பராமரிப்பின்றித் திரியும் கால்நடைகளால் தொடர்ச்சியான விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. 


இதனைக் கருத்திற்கொண்டு, கால்நடை உரிமையாளர்கள் கால்நடைகளை இரவு நேரங்களில் வீதிகளில் விடாது முறையாகப் பட்டிகளில் அடைத்து பராமரிக்க வேண்டும். 


வீதிகளில் திரியும் மாடுகள் சபை மூலம் கையகப்படுத்தப்படும். சட்ட நடைமுறைகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதை உரிமையாளர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும் போன்ற நடைமுறைகளை அமுல்படுத்துமாறு தவிசாளரின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


பொதுமக்களின் பாதுகாப்பு கருதி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு அனைத்துக் கால்நடை உரிமையாளர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


"விபத்துக்களற்ற வவுனியா வடக்கை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்போம்" என அவர் தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


இந்த நடைமுறையானது உடனடி அமலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்த வவுனியா வடக்கு பிரதேச சபை அதிரடி நடவடிக்கை வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்து ஒழுங்குமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில், வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளைக் கையகப்படுத்தும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,வீதிகளில் பராமரிப்பின்றித் திரியும் கால்நடைகளால் தொடர்ச்சியான விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு, கால்நடை உரிமையாளர்கள் கால்நடைகளை இரவு நேரங்களில் வீதிகளில் விடாது முறையாகப் பட்டிகளில் அடைத்து பராமரிக்க வேண்டும். வீதிகளில் திரியும் மாடுகள் சபை மூலம் கையகப்படுத்தப்படும். சட்ட நடைமுறைகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதை உரிமையாளர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும் போன்ற நடைமுறைகளை அமுல்படுத்துமாறு தவிசாளரின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு அனைத்துக் கால்நடை உரிமையாளர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்."விபத்துக்களற்ற வவுனியா வடக்கை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்போம்" என அவர் தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.இந்த நடைமுறையானது உடனடி அமலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement