• Jan 24 2025

சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வவுனியா மாணவன் சாதனை..!

Sharmi / Dec 12th 2024, 1:33 pm
image

சர்வதேச ரீதியில் இடம்பெற்ற விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் பா.கசிபன் மூன்றாம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை பெற்றுக்கொண்டார்.

கடந்த வாரம் ருமேனியாவில் இடம்பெற்ற இவ் சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணம், வவுனியா,கண்டி, களுத்துறை,கொழும்பு போன்ற  மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

ஐம்பது நாடுகளில் இருந்து சுமார் 310 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய இவ் ஒலிம்பியாட் போட்டியில் தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்டியதன் மூலம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன்  வெற்றி பெற்று  பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கும் இந் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் குறித்த மாணவனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வவுனியா மாணவன் சாதனை. சர்வதேச ரீதியில் இடம்பெற்ற விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் பா.கசிபன் மூன்றாம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை பெற்றுக்கொண்டார்.கடந்த வாரம் ருமேனியாவில் இடம்பெற்ற இவ் சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணம், வவுனியா,கண்டி, களுத்துறை,கொழும்பு போன்ற  மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.ஐம்பது நாடுகளில் இருந்து சுமார் 310 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய இவ் ஒலிம்பியாட் போட்டியில் தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்டியதன் மூலம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன்  வெற்றி பெற்று  பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கும் இந் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த மாணவனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement