• Nov 23 2024

வடமாகாணத்தில் 11 வருடகால சாதனையினை முறியடைத்த வவுனியா மாணவன் டனுசன் - குவியும் வாழ்த்துக்கள்!

Tamil nila / Jul 7th 2024, 11:18 pm
image

வடமாகாணத்தில் கடந்த 2013ம் ஆண்டு 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஒடி முடித்த சாதனையினை 11 வருடங்களின் பின்னர் நேற்று இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் போது 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஓடி சமன் செய்துள்ளமையுடன் வடமாகாணத்தில் சிறந்த சுவட்டு வீரராக சம்பியனை வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசமாக்கியுள்ளார். 


வடமாகாண மாகாண விளையாட்டு பெருவிழாவானது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று மற்றும் இன்றைய தினம்  இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் போதே பயிற்சிவிப்பாளர் குமார் நவநீதன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் வவுனியா வீரர் சசிகுமார் டனுசன் இச்சாதனையினை நிலை நாட்டியுள்ளார்.



சசிகுமார் டனுசன் தேசிய மட்ட விளையாட்டு விழாவில் பங்குபற்றி 1050மீற்றர் ஓட்டப்போட்டி இறுதிப்போட்டியில் 6வது இடத்தினையும் , தேசிய இளைஞர் விளையாட்டு பெருவிழாவில் 20வயதுக்கு மேற்பட்டோருக்கான 800 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் ஆகிய ஒட்டபோட்டியில் 4வது இடத்தினையும் என பல சாதனைகளை புரிந்து வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



வடமாகாணத்தில் 11 வருடகால சாதனையினை முறியடைத்த வவுனியா மாணவன் டனுசன் - குவியும் வாழ்த்துக்கள் வடமாகாணத்தில் கடந்த 2013ம் ஆண்டு 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஒடி முடித்த சாதனையினை 11 வருடங்களின் பின்னர் நேற்று இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் போது 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஓடி சமன் செய்துள்ளமையுடன் வடமாகாணத்தில் சிறந்த சுவட்டு வீரராக சம்பியனை வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசமாக்கியுள்ளார். வடமாகாண மாகாண விளையாட்டு பெருவிழாவானது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று மற்றும் இன்றைய தினம்  இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் போதே பயிற்சிவிப்பாளர் குமார் நவநீதன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் வவுனியா வீரர் சசிகுமார் டனுசன் இச்சாதனையினை நிலை நாட்டியுள்ளார்.சசிகுமார் டனுசன் தேசிய மட்ட விளையாட்டு விழாவில் பங்குபற்றி 1050மீற்றர் ஓட்டப்போட்டி இறுதிப்போட்டியில் 6வது இடத்தினையும் , தேசிய இளைஞர் விளையாட்டு பெருவிழாவில் 20வயதுக்கு மேற்பட்டோருக்கான 800 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் ஆகிய ஒட்டபோட்டியில் 4வது இடத்தினையும் என பல சாதனைகளை புரிந்து வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement