• Mar 14 2026

புத்தளம் – உடப்பு பகுதியில் வாகன விபத்து!

Ziya / Feb 17th 2026, 4:52 pm
image

புத்தளம் மாவட்டத்தின் உடப்பு 1ம் வட்டாரம் பகுதியில் இன்று (17) மதியம் இடம்பெற்ற சாலை விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


ஆண்டிமுனையிலிருந்து உடப்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியின் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென திருப்பப்பட்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.


முச்சக்கர வண்டி அதிக வேகத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின்சாரத் தூணில் இந்த  விபத்து ஏற்பட்டுள்ளது.


காயமடைந்த பெண் முதலில் உடப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளம் – உடப்பு பகுதியில் வாகன விபத்து புத்தளம் மாவட்டத்தின் உடப்பு 1ம் வட்டாரம் பகுதியில் இன்று (17) மதியம் இடம்பெற்ற சாலை விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.ஆண்டிமுனையிலிருந்து உடப்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியின் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென திருப்பப்பட்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.முச்சக்கர வண்டி அதிக வேகத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின்சாரத் தூணில் இந்த  விபத்து ஏற்பட்டுள்ளது.காயமடைந்த பெண் முதலில் உடப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement