• Apr 06 2025

வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம்: தடைப்பட்ட மின்சாரம்..!

Sharmi / Apr 2nd 2025, 12:26 pm
image

மட்டக்களப்பில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக இன்று காலை  பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் காரில் பயணம் செய்தவர் காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது.

அத்தோடு உயர் மின் அழுத்த மின்சாரத் தூணும் உடைந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது

இன்று காலையிலிருந்து இப் பிரதேசத்தில் மழை பெய்து வருகிறது.  மழையின் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம்: தடைப்பட்ட மின்சாரம். மட்டக்களப்பில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக இன்று காலை  பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்தில் காரில் பயணம் செய்தவர் காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது.அத்தோடு உயர் மின் அழுத்த மின்சாரத் தூணும் உடைந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டுள்ளதுஇன்று காலையிலிருந்து இப் பிரதேசத்தில் மழை பெய்து வருகிறது.  மழையின் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement