• Dec 03 2024

ரணிலுக்கு ஆதரவளிப்பதற்கு வேலுகுமார் எடுத்த முடிவு சரியானது- திருச்செல்வம் சுட்டிக்காட்டு..!

Sharmi / Aug 17th 2024, 4:43 pm
image

குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுத்து, இலங்கையை அபிவிருத்தி திசை நோக்கி அழைத்துச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சியை கையளிக்கும் முடிவை மக்கள் எடுத்துவிட்டனர். எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி இது உறுதியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை தொகுதி அமைப்பாளரான சண்முகம் திருச்செல்வம் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ பல்வேறு தடைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு மத்தியில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கின்றது. சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு பெருந்தோட்ட மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்து கொள்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சின்னம் ‘கேஸ் சிலிண்டராகும்’. இற்றைக்கு ஈராண்டுகளுக்கு முன்னர் ‘கேஸ்’ வாங்குவதற்கு வரிசைகளில் கால்கடுக்க காத்திருந்தமை மறக்கமுடியாது.  வரிசைகளில் நின்று உயிரிழந்தும் உள்ளனர். அந்த கொடூரமான வரிசை யுகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே முடிவு கட்டினார். அதுமட்டுமல்ல வங்குரோத்து நிலையிலிருந்து இந்நாட்டையும் மீட்டுள்ளார். 

சவாலை ஏற்காது, ஓடி ஒளிந்த வாய்ச்சொல் வீரர்களுக்கு மத்தியில் சவாலை ஏற்று, சொல்லில் அல்லாமல் செயலில் காட்டியவர்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அதனால்தான் நாடு இன்று முன்னேறிவருகின்றது.

எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து, அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை தொடர்வதற்கு மக்கள் ஆணை வழங்குவார்கள். நாட்டில் எட்டு திக்கிலும் ஜனாதிபதிக்கான ஆதரவு அலை அதிகரித்துவருகின்றது.

நாம் பட்டபாடுபோதும், மீண்டும் வரிசை யுகம் தேவையில்லை, மாற்று வேட்பாளர்களுக்கு வாக்களித்து பரிசோதனை செய்துகொண்டிருப்பதற்காக காலம் இதுவல்ல என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தைக்கூட கைப்பற்றுவதற்கு சிலர் முற்பட்டனர். ஆனால் அதனை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தையும், சட்டம், ஒழுங்கையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்தார். அவர் இல்லாவிட்டால் பங்களாதேஷில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையில் ஏற்பட்டிருக்கும்.

இன்று ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் சுதந்திரமாக பிரச்சாரம் செய்கின்றன. இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே காரணம்.

நாட்டின் அபிவிருத்தி கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு வேலுகுமார் எடுத்த முடிவு சரியானதாகும். மக்களும் அதனை வரவேற்றுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நான் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

ரணிலுக்கு ஆதரவளிப்பதற்கு வேலுகுமார் எடுத்த முடிவு சரியானது- திருச்செல்வம் சுட்டிக்காட்டு. குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுத்து, இலங்கையை அபிவிருத்தி திசை நோக்கி அழைத்துச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சியை கையளிக்கும் முடிவை மக்கள் எடுத்துவிட்டனர். எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி இது உறுதியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை தொகுதி அமைப்பாளரான சண்முகம் திருச்செல்வம் தெரிவித்தார்.கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.“ பல்வேறு தடைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு மத்தியில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கின்றது. சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு பெருந்தோட்ட மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்து கொள்கின்றோம்.ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சின்னம் ‘கேஸ் சிலிண்டராகும்’. இற்றைக்கு ஈராண்டுகளுக்கு முன்னர் ‘கேஸ்’ வாங்குவதற்கு வரிசைகளில் கால்கடுக்க காத்திருந்தமை மறக்கமுடியாது.  வரிசைகளில் நின்று உயிரிழந்தும் உள்ளனர். அந்த கொடூரமான வரிசை யுகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே முடிவு கட்டினார். அதுமட்டுமல்ல வங்குரோத்து நிலையிலிருந்து இந்நாட்டையும் மீட்டுள்ளார். சவாலை ஏற்காது, ஓடி ஒளிந்த வாய்ச்சொல் வீரர்களுக்கு மத்தியில் சவாலை ஏற்று, சொல்லில் அல்லாமல் செயலில் காட்டியவர்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அதனால்தான் நாடு இன்று முன்னேறிவருகின்றது. எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து, அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை தொடர்வதற்கு மக்கள் ஆணை வழங்குவார்கள். நாட்டில் எட்டு திக்கிலும் ஜனாதிபதிக்கான ஆதரவு அலை அதிகரித்துவருகின்றது. நாம் பட்டபாடுபோதும், மீண்டும் வரிசை யுகம் தேவையில்லை, மாற்று வேட்பாளர்களுக்கு வாக்களித்து பரிசோதனை செய்துகொண்டிருப்பதற்காக காலம் இதுவல்ல என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.நாடாளுமன்றத்தைக்கூட கைப்பற்றுவதற்கு சிலர் முற்பட்டனர். ஆனால் அதனை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தையும், சட்டம், ஒழுங்கையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்தார். அவர் இல்லாவிட்டால் பங்களாதேஷில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையில் ஏற்பட்டிருக்கும். இன்று ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் சுதந்திரமாக பிரச்சாரம் செய்கின்றன. இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே காரணம்.நாட்டின் அபிவிருத்தி கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு வேலுகுமார் எடுத்த முடிவு சரியானதாகும். மக்களும் அதனை வரவேற்றுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நான் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement