• May 17 2026

இனி வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும்; மீண்டும் பாரிய தாக்குதலை நடத்த தயார்..! டிரம்ப் எச்சரிக்கை

Chithra / Jan 4th 2026, 8:35 am
image

வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதன்முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். 


'நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்' போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். 


தனது வழிகாட்டலின் கீழ், வெனிசுலா தலைநகரில் இரவு முதல் காலை வரை வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழியாக "அசாதாரணமான இராணுவ நடவடிக்கை" முன்னெடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். 


பாதுகாப்பான மற்றும் முறையான அதிகாரப் பரிமாற்றம் இடம்பெறும் வரை, வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும் என அவர் அறிவித்துள்ளார். 


இதன் மூலம் வெனிசுலா மக்கள் பாதுகாப்பாகவும் வளமாகவும் மாறுவார்கள் என்றும், அமெரிக்காவில் வசிக்கும் வெனிசுலா மக்கள் இதனால் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 


மதுரோவுக்கு நேர்ந்த கதி தமக்கும் ஏற்படும் என்பதை வெனிசுலாவின் ஏனைய அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். 


மதுரோ ஒரு சட்டவிரோத சர்வாதிகாரி என்றும், அமெரிக்காவிற்குள் பெருமளவிலான போதைப்பொருட்களைக் கடத்தியதற்கு அவரே பொறுப்பு என்றும் குற்றம் சாட்டினார். 


மதுரோவும் அவரது மனைவியும் தற்போது நியூயோர்க் நோக்கிச் செல்லும் கப்பல் ஒன்றில் இருப்பதாகவும், அங்கு சென்றடைந்ததும் அமெரிக்காவிற்கு எதிரான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்காக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். 


வெனிசுலாவிலிருந்து வரும் போதைப்பொருட்களில் 97 சதவீதமானவற்றை அமெரிக்கா கடல்வழியாகக் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், தேவைப்பட்டால் வெனிசுலா மீது இரண்டாவது மற்றும் அதைவிடப் பாரிய தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.



மேலும், அமெரிக்க படையினரின் இந்த சாமர்த்திய நகர்வு குறித்து ட்ரம்ப் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், மிக சக்திவாய்ந்த படைகளை கொண்ட ஒரே நாடு அமெரிக்கா எனவும் குறிப்பிட்டுள்ளார். 


இதன்போது, ட்ரம்பிடம் வெனிசுலாவை அமெரிக்கா நடத்துவது என்றால் அமெரிக்க துருப்புக்கள் களத்தில் இறங்குமா என்று அவரிடம் வினவப்பட்டது.


அதற்கு பதிலளித்த ட்ரம்ப், 

"தரையில் களத்தில் இறங்குவதை பற்றி நாங்கள் பயப்படவில்லை. அமெரிக்க இராணுவம் நேற்று இரவு மிக உயர்ந்த மட்டத்தில் கறத்தில் இறங்கியது.


நாங்கள் அந்த நாடு சரியாக நடத்தப்படுவதை உறுதி செய்யப் போகிறோம், நாங்கள் இப்போது மக்களை நியமிக்கிறோம். அந்த மக்கள் யார் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்தப் போகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். 


அதேநேரம், வெனிசுலாவை யார் ஆள போகின்றார்கள் என வினவிய போது, அவர் தன்னையும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவையும் நோக்கி தனது கையை சைகை காட்டியமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் பதிவியேற்றுள்ளார். 


இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டெல்சி ரோட்ரிக்ஸ், "வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி மதுரோ தான். நாட்டைப் பாதுகாக்க வெனிசுலா தயாராக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 


இதேவேளை வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா, ஈரான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


எனினும் வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்து அந்நாட்டை கைப்பற்றியமைக்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜனாதிபதி ட்ரம்ப், சுதந்திரம் மற்றும் நீதிக்காக உங்கள் துணிச்சலான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைக்கு வாழ்த்துக்கள்.உங்கள் தீர்க்கமான மன உறுதியையும், உங்கள் துணிச்சலான வீரர்களின் அற்புதமான செயலையும் நான் வணங்குகிறேன்” என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். 


அதேவேளை, எலான் மஸ்க்கும் ட்ரம்பினை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். 


அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்த்துக்கள், ஜனாதிபதி டிரம்ப்! இது உலகிற்கு கிடைத்த வெற்றி மற்றும் எல்லா இடங்களிலும் உள்ள தீய சர்வாதிகாரிகளுக்கு ஒரு தெளிவான செய்தி" என குறிப்பிட்டு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். 

இனி வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும்; மீண்டும் பாரிய தாக்குதலை நடத்த தயார். டிரம்ப் எச்சரிக்கை வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதன்முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். 'நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்' போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். தனது வழிகாட்டலின் கீழ், வெனிசுலா தலைநகரில் இரவு முதல் காலை வரை வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழியாக "அசாதாரணமான இராணுவ நடவடிக்கை" முன்னெடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். பாதுகாப்பான மற்றும் முறையான அதிகாரப் பரிமாற்றம் இடம்பெறும் வரை, வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும் என அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் வெனிசுலா மக்கள் பாதுகாப்பாகவும் வளமாகவும் மாறுவார்கள் என்றும், அமெரிக்காவில் வசிக்கும் வெனிசுலா மக்கள் இதனால் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மதுரோவுக்கு நேர்ந்த கதி தமக்கும் ஏற்படும் என்பதை வெனிசுலாவின் ஏனைய அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். மதுரோ ஒரு சட்டவிரோத சர்வாதிகாரி என்றும், அமெரிக்காவிற்குள் பெருமளவிலான போதைப்பொருட்களைக் கடத்தியதற்கு அவரே பொறுப்பு என்றும் குற்றம் சாட்டினார். மதுரோவும் அவரது மனைவியும் தற்போது நியூயோர்க் நோக்கிச் செல்லும் கப்பல் ஒன்றில் இருப்பதாகவும், அங்கு சென்றடைந்ததும் அமெரிக்காவிற்கு எதிரான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்காக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். வெனிசுலாவிலிருந்து வரும் போதைப்பொருட்களில் 97 சதவீதமானவற்றை அமெரிக்கா கடல்வழியாகக் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், தேவைப்பட்டால் வெனிசுலா மீது இரண்டாவது மற்றும் அதைவிடப் பாரிய தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.மேலும், அமெரிக்க படையினரின் இந்த சாமர்த்திய நகர்வு குறித்து ட்ரம்ப் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், மிக சக்திவாய்ந்த படைகளை கொண்ட ஒரே நாடு அமெரிக்கா எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, ட்ரம்பிடம் வெனிசுலாவை அமெரிக்கா நடத்துவது என்றால் அமெரிக்க துருப்புக்கள் களத்தில் இறங்குமா என்று அவரிடம் வினவப்பட்டது.அதற்கு பதிலளித்த ட்ரம்ப், "தரையில் களத்தில் இறங்குவதை பற்றி நாங்கள் பயப்படவில்லை. அமெரிக்க இராணுவம் நேற்று இரவு மிக உயர்ந்த மட்டத்தில் கறத்தில் இறங்கியது.நாங்கள் அந்த நாடு சரியாக நடத்தப்படுவதை உறுதி செய்யப் போகிறோம், நாங்கள் இப்போது மக்களை நியமிக்கிறோம். அந்த மக்கள் யார் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்தப் போகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், வெனிசுலாவை யார் ஆள போகின்றார்கள் என வினவிய போது, அவர் தன்னையும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவையும் நோக்கி தனது கையை சைகை காட்டியமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் பதிவியேற்றுள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டெல்சி ரோட்ரிக்ஸ், "வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி மதுரோ தான். நாட்டைப் பாதுகாக்க வெனிசுலா தயாராக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா, ஈரான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.எனினும் வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்து அந்நாட்டை கைப்பற்றியமைக்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜனாதிபதி ட்ரம்ப், சுதந்திரம் மற்றும் நீதிக்காக உங்கள் துணிச்சலான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைக்கு வாழ்த்துக்கள்.உங்கள் தீர்க்கமான மன உறுதியையும், உங்கள் துணிச்சலான வீரர்களின் அற்புதமான செயலையும் நான் வணங்குகிறேன்” என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, எலான் மஸ்க்கும் ட்ரம்பினை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்த்துக்கள், ஜனாதிபதி டிரம்ப் இது உலகிற்கு கிடைத்த வெற்றி மற்றும் எல்லா இடங்களிலும் உள்ள தீய சர்வாதிகாரிகளுக்கு ஒரு தெளிவான செய்தி" என குறிப்பிட்டு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement