• Nov 28 2024

சஜித் ஆதரவாளர்களை அச்சுறுத்திய விஜயகலா - பொலிஸில் முறைப்பாடு!

Chithra / Sep 18th 2024, 11:31 am
image


ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்ட தன்னையும் ஆதரவாளர்களையும்  முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அச்சுறுத்தும் வகையில் செய்யப்பட்டதாக வட்டுக்கோட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி கிளை அமைப்பாளர் சதாசிவம் ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர்  தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்து  நேற்று செவ்வாய்க்கிழமை ஊர் காவற்துறை பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டோம். 

மதியம் மர நிழலில்  உணவு அருந்துவதற்காக இளைப்பாறிய நிலையில் அவ் வழியாக காரில் வந்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தன்னுடன் வந்தவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரத் துண்டுகளை வழங்கினார்.

அப்போது நாங்கள் ஏன் இங்கு நிற்கிறோம் என்பது தொடர்பில் அவருக்கு தெரியப்படுத்திய நிலையில், கோபமடைந்த விஜயகலா எமது வேட்பாளரை கீழ்த்தரமாக பேசியதுடன் நான் வழங்கிய வேலை வாய்ப்பினை அவர் நிறுத்தியதாக எம்முடன் முரண்பட்டார்.

அதுமட்டுமல்லாது என்னுடன் வந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தான் பெற்று தருவதாகவும் சஜித் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்தார். 

இதன்போது ஒரு வேட்பாளரை ஆதரித்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஜனநாயக உரிமை அதனை நீங்கள் எங்களுக்கு கூறவேண்டிய தேவை இல்லை என நான் கூறினேன். 

அதன்பின் நான் ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக நடந்த விபரங்களை தெரிவித்த நிலையில்,

கோபமடைந்த விஜயகலா சிங்கள மொழியில் என்னை தர குறைவாக பேசியதுடன் என்னை ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது என கூறிவிட்டு சென்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.

சஜித் ஆதரவாளர்களை அச்சுறுத்திய விஜயகலா - பொலிஸில் முறைப்பாடு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்ட தன்னையும் ஆதரவாளர்களையும்  முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அச்சுறுத்தும் வகையில் செய்யப்பட்டதாக வட்டுக்கோட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி கிளை அமைப்பாளர் சதாசிவம் ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் அவர்  தெரிவிக்கையில்,சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்து  நேற்று செவ்வாய்க்கிழமை ஊர் காவற்துறை பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டோம். மதியம் மர நிழலில்  உணவு அருந்துவதற்காக இளைப்பாறிய நிலையில் அவ் வழியாக காரில் வந்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தன்னுடன் வந்தவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரத் துண்டுகளை வழங்கினார்.அப்போது நாங்கள் ஏன் இங்கு நிற்கிறோம் என்பது தொடர்பில் அவருக்கு தெரியப்படுத்திய நிலையில், கோபமடைந்த விஜயகலா எமது வேட்பாளரை கீழ்த்தரமாக பேசியதுடன் நான் வழங்கிய வேலை வாய்ப்பினை அவர் நிறுத்தியதாக எம்முடன் முரண்பட்டார்.அதுமட்டுமல்லாது என்னுடன் வந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தான் பெற்று தருவதாகவும் சஜித் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்தார். இதன்போது ஒரு வேட்பாளரை ஆதரித்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஜனநாயக உரிமை அதனை நீங்கள் எங்களுக்கு கூறவேண்டிய தேவை இல்லை என நான் கூறினேன். அதன்பின் நான் ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக நடந்த விபரங்களை தெரிவித்த நிலையில்,கோபமடைந்த விஜயகலா சிங்கள மொழியில் என்னை தர குறைவாக பேசியதுடன் என்னை ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது என கூறிவிட்டு சென்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement