• Dec 14 2024

கிளிநொச்சியில் வாக்களிப்பு ஆரம்பம் : மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

Tharmini / Nov 14th 2024, 10:10 am
image

இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று (14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர்கள் காலை 7.00 மணி தொடக்கம் தமது ஜனநாயக கடமையினை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.

இத்தேர்தல் பணியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 1,863 அரச உத்தியோகத்தர்கள், 396 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






கிளிநொச்சியில் வாக்களிப்பு ஆரம்பம் : மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று (14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர்கள் காலை 7.00 மணி தொடக்கம் தமது ஜனநாயக கடமையினை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.இத்தேர்தல் பணியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 1,863 அரச உத்தியோகத்தர்கள், 396 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement