நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (16) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறுகிய காலத்திற்கு பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 10 நாட்களுக்குள் நாடு முழுவதும் பரவலான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
தற்போது எல் நினோ (El Niño) நிலைமையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் காலங்களில் பலத்த மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை கருத்திற்கொண்டு நடவடிக்கைகளை தயார்படுத்த வேண்டுமென குறிப்பிட்டார்.
குறிப்பாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் தொடர்ச்சியாக தாழமுக்க நிலைமைகள் உருவாகும் காலப்பகுதி என்பதால், எல் நினோ நிலைமையின் தாக்கத்துடன் இந்த நிலைமைகள் மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டுமெனவும், டிசம்பர் மாதத்தில் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சாதாரண அளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த அவர், சில சந்தர்ப்பங்களில் இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) நிலைமையின் தாக்கத்தால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாகக் கூறினார்.
மேலும், அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பநிலை அதிகரித்து, மழைவீழ்ச்சி குறைவடையும் வானிலை நிலைமை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால், எதிர்வரும் சில மாதங்களில் நாட்டிற்கு கிடைக்கும் மழைநீரை முறையாக முகாமைத்துவம் செய்து பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அஜித் விஜேமான்ன மேலும் தெரிவித்துள்ளார்.
பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை - அடுத்த 10 நாட்களில் பரவலான மழை நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று (16) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறுகிய காலத்திற்கு பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, எதிர்வரும் 10 நாட்களுக்குள் நாடு முழுவதும் பரவலான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தற்போது எல் நினோ (El Niño) நிலைமையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் காலங்களில் பலத்த மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை கருத்திற்கொண்டு நடவடிக்கைகளை தயார்படுத்த வேண்டுமென குறிப்பிட்டார்.குறிப்பாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் தொடர்ச்சியாக தாழமுக்க நிலைமைகள் உருவாகும் காலப்பகுதி என்பதால், எல் நினோ நிலைமையின் தாக்கத்துடன் இந்த நிலைமைகள் மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.எனவே, இந்த விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டுமெனவும், டிசம்பர் மாதத்தில் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சாதாரண அளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த அவர், சில சந்தர்ப்பங்களில் இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) நிலைமையின் தாக்கத்தால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாகக் கூறினார்.மேலும், அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பநிலை அதிகரித்து, மழைவீழ்ச்சி குறைவடையும் வானிலை நிலைமை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.இதனால், எதிர்வரும் சில மாதங்களில் நாட்டிற்கு கிடைக்கும் மழைநீரை முறையாக முகாமைத்துவம் செய்து பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அஜித் விஜேமான்ன மேலும் தெரிவித்துள்ளார்.