• Nov 13 2024

விடுமுறையில் வெளிநாடு சென்ற அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Chithra / Sep 9th 2024, 9:26 am
image

 

விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், விடுமுறை நிறைவடைந்த பின்னர் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியான சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வெளிநாட்டு விடுமுறை காலத்தை நீடிக்க வேண்டுமாயின் முதலாவது விடுமுறை காலம் நிறைவடைவதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென அரச நிறுவன பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை காலத்தை நீடித்துக்கொள்ளும் அனுமதியை பெறுவதில் ஏற்படும் சிக்கல் ஏற்கனவே பெறப்பட்ட விடுமுறை காலப்பகுதிக்குள் தீர்க்கப்படாவிட்டால் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்க வேண்டியது கட்டாயமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுமுறையில் வெளிநாடு சென்ற அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை  விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், விடுமுறை நிறைவடைந்த பின்னர் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயமானது பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியான சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில், வெளிநாட்டு விடுமுறை காலத்தை நீடிக்க வேண்டுமாயின் முதலாவது விடுமுறை காலம் நிறைவடைவதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென அரச நிறுவன பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விடுமுறை காலத்தை நீடித்துக்கொள்ளும் அனுமதியை பெறுவதில் ஏற்படும் சிக்கல் ஏற்கனவே பெறப்பட்ட விடுமுறை காலப்பகுதிக்குள் தீர்க்கப்படாவிட்டால் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்க வேண்டியது கட்டாயமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement