• Feb 27 2026

கிராம உத்தியோகத்தர்களின் போராட்ட எச்சரிக்கை: அவசரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமைச்சு!

Chithra / Feb 26th 2026, 8:58 am
image

 

தர உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி கிராம உத்தியோகத்தர்கள் முன்னெடுக்கவிருந்த போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களுடன் அவசரக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தப் பொதுநிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.


17 ஆண்டுகால தர உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காததால், எதிர்வரும் மார்ச் 03-ஆம் திகதி அமைதிப் போராட்டம் நடத்த 2009/2010 கிராம உத்தியோகத்தர் ஒன்றியம் திட்டமிட்டிருந்தது.


இந்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, நாளை அவசரப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.


2007-இல் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவாகி 2009/2010 ஆண்டுகளில் பணியில் இணைந்த 2,300க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் இந்தப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமது நியாயமான தொழில்சார் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ச்சியாக செயற்படப் போவதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளது.

கிராம உத்தியோகத்தர்களின் போராட்ட எச்சரிக்கை: அவசரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமைச்சு  தர உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி கிராம உத்தியோகத்தர்கள் முன்னெடுக்கவிருந்த போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களுடன் அவசரக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தப் பொதுநிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.17 ஆண்டுகால தர உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காததால், எதிர்வரும் மார்ச் 03-ஆம் திகதி அமைதிப் போராட்டம் நடத்த 2009/2010 கிராம உத்தியோகத்தர் ஒன்றியம் திட்டமிட்டிருந்தது.இந்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, நாளை அவசரப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.2007-இல் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவாகி 2009/2010 ஆண்டுகளில் பணியில் இணைந்த 2,300க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் இந்தப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமது நியாயமான தொழில்சார் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ச்சியாக செயற்படப் போவதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement