களனி மற்றும் களு கங்கையை அண்மித்த பகுதிகளில் இன்று கடும் மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் சுகீஸ்வர இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் களு மற்றும் களனி கங்கைளின் மேல் பகுதிகளில் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கங்கைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்தால் அந்த கங்கைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளதுடன், அதில் 7 பேர் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.
அதேநேரம், கேகாலை அரநாயக்க மாவனெல்ல பிரதான வீதியில் நீர் வழங்கல் சபைக்கு அருகில் உள்ள பலா மரத்தின் ஒரு பகுதி மின்மாற்றி மீது விழுந்துள்ளது.
இதன் காரணமாக அரநாயக்க பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வௌ்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் - அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை களனி மற்றும் களு கங்கையை அண்மித்த பகுதிகளில் இன்று கடும் மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் சுகீஸ்வர இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் களு மற்றும் களனி கங்கைளின் மேல் பகுதிகளில் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கங்கைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்தால் அந்த கங்கைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளதுடன், அதில் 7 பேர் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.அதேநேரம், கேகாலை அரநாயக்க மாவனெல்ல பிரதான வீதியில் நீர் வழங்கல் சபைக்கு அருகில் உள்ள பலா மரத்தின் ஒரு பகுதி மின்மாற்றி மீது விழுந்துள்ளது. இதன் காரணமாக அரநாயக்க பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.