பொது இடங்களில் குப்பை போட்ட வீடுகளுக்கு முன்னே அந்தக் குப்பைகள் கொட்டப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் இந்தியாவின் பெங்களூரில் பதிவாகியுள்ளது.
பெங்களூர் பொது இடங்களில் சிலர் குப்பைகளை போட்டுள்ளனர். அதனை இனங்கண்ட பெங்களூரு திடக்கழிவு நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதில் எந்த வீட்டினர் பொது இடங்களில் குப்பை போடுகின்றனரோ, அந்த வீட்டின் முன் அனைத்து குப்பைகளைக் கொட்டுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று திடக்கழிவு நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பொது இடங்களில் குப்பைபோட்ட, 218 வீடுகளை அடையாளம் கண்டு அந்தந்த வீடுகளின் முன் குப்பைகளைக் கொட்டி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதுவரையில் இல்லாத ஓர் அதிரடி நடவடிக்கையை பெங்களூர் திடக்கழிவு நிர்வாகம் மேற்கொண்டுள்ளமை பாராட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நடவடிக்கை மக்களுக்கு ஓர் முன்னுதாரணமாகவும் பொது இடங்களில் குப்பைக் கொட்டக்கூடாது என்ற விழிப்புணர்வாகவும் காணப்படுகின்றது.
பொது இடத்தில் குப்பை போட்டவரின் வீட்டிற்கு முன்னால் கொட்டப்பட்ட கழிவுகள்; அரச நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை பொது இடங்களில் குப்பை போட்ட வீடுகளுக்கு முன்னே அந்தக் குப்பைகள் கொட்டப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் இந்தியாவின் பெங்களூரில் பதிவாகியுள்ளது. பெங்களூர் பொது இடங்களில் சிலர் குப்பைகளை போட்டுள்ளனர். அதனை இனங்கண்ட பெங்களூரு திடக்கழிவு நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதில் எந்த வீட்டினர் பொது இடங்களில் குப்பை போடுகின்றனரோ, அந்த வீட்டின் முன் அனைத்து குப்பைகளைக் கொட்டுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று திடக்கழிவு நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பொது இடங்களில் குப்பைபோட்ட, 218 வீடுகளை அடையாளம் கண்டு அந்தந்த வீடுகளின் முன் குப்பைகளைக் கொட்டி அபராதமும் விதிக்கப்பட்டது. இதுவரையில் இல்லாத ஓர் அதிரடி நடவடிக்கையை பெங்களூர் திடக்கழிவு நிர்வாகம் மேற்கொண்டுள்ளமை பாராட்டப்பட்டுள்ளது.அத்துடன் இந்த நடவடிக்கை மக்களுக்கு ஓர் முன்னுதாரணமாகவும் பொது இடங்களில் குப்பைக் கொட்டக்கூடாது என்ற விழிப்புணர்வாகவும் காணப்படுகின்றது.