• Dec 27 2024

பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள கிரக வளிமண்டலத்தில் நீர்..!!samugammedia

Tamil nila / Jan 27th 2024, 9:02 pm
image

பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் கண்டறிந்துள்ளது.

மேலும் பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  

ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் கடந்த 25 ஆண்டுகளாக வானில் இருந்தபடி நமது அண்டவெளியை படம் எடுத்து வருகிறது.

இது வரை நமது பேரண்டத்தின் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்து ஜேம்ஸ் வெப்புக்கு முந்தைய டெலஸ்கோப்பாக பல ஆராய்ச்சிகளையும், கருது கோள்களையும் வெளிப்படுத்தியது.

பூமியின் விட்டத்தில் ஏறக்குறைய இரண்டு மடங்கு இருக்கும் GJ 9827d என்கிற கிரகத்தில் நீர் நிறைந்த வளிமண்டலங்கள் இருப்பதை ஸ்பேஸ் ஸ்பேஸ் டெலஸ்கோப் கண்டறிந்துள்ளது.

பாறைகள் நிறைந்த கிரகங்களில் வளிமண்டலங்களின் நீர் மூலக்கூறுகள் இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான இது ஒரு முக்கியமான படியாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதன் வளிமண்டலத்தின் ஹைட்ரஜன் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்திருப்பதால் உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பூமியில் உள்ள கடலை போன்று இரண்டு மடங்கு அதிகமாக நீராவியை இந்த கிரகணம் பெற்றிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கிரகம் வெள்ளி கிரகத்தை போல 425 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருப்பதால், வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மீனம் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஒரு குறு விண்மீனை சுற்றி வரும் இந்த கிரகம் ஒவ்வொரு முறை இந்த சூரியனை கடந்து செல்லும் நேரத்தில் எடுக்கப்படும் நிறமாலை தரவுகளின் அடிப்படையில் அந்த கிரகத்தில் உள்ள மூலக்கூறுகள் கண்டறியப்படுகிறது.

 இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறு நிறைந்த வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

97 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மீனம் நட்சத்திர மண்டலத்தில் பூமியைப் போன்ற வளிமண்டலம் பெற்ற ஒரு கிரகத்தை கண்டறிந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது இதற்கு முன்பு கண்டறிந்த நீர் மூலக்கூறு ஆக்சிஜன் இருக்கும் கிரகங்களை ஒப்பிடுகையில், தற்போது கண்டறிந்துள்ள கிரகம் மிக அருகில் இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள கிரக வளிமண்டலத்தில் நீர்.samugammedia பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் கண்டறிந்துள்ளது.மேலும் பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் கடந்த 25 ஆண்டுகளாக வானில் இருந்தபடி நமது அண்டவெளியை படம் எடுத்து வருகிறது.இது வரை நமது பேரண்டத்தின் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்து ஜேம்ஸ் வெப்புக்கு முந்தைய டெலஸ்கோப்பாக பல ஆராய்ச்சிகளையும், கருது கோள்களையும் வெளிப்படுத்தியது.பூமியின் விட்டத்தில் ஏறக்குறைய இரண்டு மடங்கு இருக்கும் GJ 9827d என்கிற கிரகத்தில் நீர் நிறைந்த வளிமண்டலங்கள் இருப்பதை ஸ்பேஸ் ஸ்பேஸ் டெலஸ்கோப் கண்டறிந்துள்ளது.பாறைகள் நிறைந்த கிரகங்களில் வளிமண்டலங்களின் நீர் மூலக்கூறுகள் இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான இது ஒரு முக்கியமான படியாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இதன் வளிமண்டலத்தின் ஹைட்ரஜன் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்திருப்பதால் உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.பூமியில் உள்ள கடலை போன்று இரண்டு மடங்கு அதிகமாக நீராவியை இந்த கிரகணம் பெற்றிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த கிரகம் வெள்ளி கிரகத்தை போல 425 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருப்பதால், வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக கூறப்படுகிறது.மீனம் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஒரு குறு விண்மீனை சுற்றி வரும் இந்த கிரகம் ஒவ்வொரு முறை இந்த சூரியனை கடந்து செல்லும் நேரத்தில் எடுக்கப்படும் நிறமாலை தரவுகளின் அடிப்படையில் அந்த கிரகத்தில் உள்ள மூலக்கூறுகள் கண்டறியப்படுகிறது. இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறு நிறைந்த வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.97 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மீனம் நட்சத்திர மண்டலத்தில் பூமியைப் போன்ற வளிமண்டலம் பெற்ற ஒரு கிரகத்தை கண்டறிந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இது இதற்கு முன்பு கண்டறிந்த நீர் மூலக்கூறு ஆக்சிஜன் இருக்கும் கிரகங்களை ஒப்பிடுகையில், தற்போது கண்டறிந்துள்ள கிரகம் மிக அருகில் இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement