• Nov 14 2024

கேகாலையில் 48 மணி நேரத்துக்கு நீர் விநியோக தடை..!

Chithra / Nov 5th 2024, 8:18 am
image

 

கேகாலை நகரின் பிரதான குழாய் உடைப்பு காரணமாக 48 மணி நேரங்களுக்கு அப் பகுதிக்கான நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை   அறிவித்துள்ளது.

கேகாலை நகருக்கு நீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் கல் விழுந்து சேதம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சேதமடைந்த குழாயின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் இன்று (05) மாலை 6 மணி முதல் நாளை (06) காலை 6 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு தடைப்படவுள்ளது.

இதனால், கம்பஹா, ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகளுக்கும், கட்டான, மினுவாங்கொடை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கும் குறித்த காலப் பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

கேகாலையில் 48 மணி நேரத்துக்கு நீர் விநியோக தடை.  கேகாலை நகரின் பிரதான குழாய் உடைப்பு காரணமாக 48 மணி நேரங்களுக்கு அப் பகுதிக்கான நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை   அறிவித்துள்ளது.கேகாலை நகருக்கு நீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் கல் விழுந்து சேதம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.சேதமடைந்த குழாயின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் இன்று (05) மாலை 6 மணி முதல் நாளை (06) காலை 6 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு தடைப்படவுள்ளது.இதனால், கம்பஹா, ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகளுக்கும், கட்டான, மினுவாங்கொடை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கும் குறித்த காலப் பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement