• Nov 07 2024

முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் தேவை என்பதற்க்காகவே நாம் போட்டியிடுகிறோம்- வேந்தன் தெரிவிப்பு!

Tamil nila / Nov 6th 2024, 7:10 pm
image

Advertisement

முன்னாள் போராளுகளுக்கான அங்கீகாரம் தேவை என்பதற்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையிலே ஒரு மாற்றத்தை கொண்டுவந்தது சிங்கள மக்கள் ஆனால் அவர்கள் எமது பகுதிக்கு வந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போவது என்பது ஒரு வேடிக்கையான விடயம், இணைந்திருந்த வடக்கு கிழக்கையும் பிரித்தவர்கள் இந்த ஜேவீபியினர்தான். 

அதே போன்று சுனாமி கட்டமைப்பையும், இல்லாமல் செய்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை கூட இல்லாமல் செய்தவர்களும் இவ் ஜேவிபியினர்தான்.

அதே போன்று ஐநாசபையில் கொண்டுவரப்பட்ட யுத்த குற்ற பிரேரணை தொடர்பில் இலங்கையில் யுத்த குற்றம் நடைபெறவில்லை , தாம் எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் விசாரணைக்கு போகத் தேவை இல்லை என்று சொன்னவர்களும் இந்த ஜேவீபியினர்தான். ஆகவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிபப்பது எங்கள் தலையில் மண் அள்ளி போடும் செயல் என்றும் தெரிவித்ததுடன்  நாங்கள் ஜனநாயக ரீதியாக பல கட்சிகளின் கூட்டாக இணைந்து இத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். ஆகவே எங்களுக்கு எமது சங்கு சின்னத்திற்க்கு வாக்களியுங்கள் என்றார்.


முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் தேவை என்பதற்க்காகவே நாம் போட்டியிடுகிறோம்- வேந்தன் தெரிவிப்பு முன்னாள் போராளுகளுக்கான அங்கீகாரம் தேவை என்பதற்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.அவர் வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தென்னிலங்கையிலே ஒரு மாற்றத்தை கொண்டுவந்தது சிங்கள மக்கள் ஆனால் அவர்கள் எமது பகுதிக்கு வந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போவது என்பது ஒரு வேடிக்கையான விடயம், இணைந்திருந்த வடக்கு கிழக்கையும் பிரித்தவர்கள் இந்த ஜேவீபியினர்தான். அதே போன்று சுனாமி கட்டமைப்பையும், இல்லாமல் செய்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை கூட இல்லாமல் செய்தவர்களும் இவ் ஜேவிபியினர்தான்.அதே போன்று ஐநாசபையில் கொண்டுவரப்பட்ட யுத்த குற்ற பிரேரணை தொடர்பில் இலங்கையில் யுத்த குற்றம் நடைபெறவில்லை , தாம் எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் விசாரணைக்கு போகத் தேவை இல்லை என்று சொன்னவர்களும் இந்த ஜேவீபியினர்தான். ஆகவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிபப்பது எங்கள் தலையில் மண் அள்ளி போடும் செயல் என்றும் தெரிவித்ததுடன்  நாங்கள் ஜனநாயக ரீதியாக பல கட்சிகளின் கூட்டாக இணைந்து இத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். ஆகவே எங்களுக்கு எமது சங்கு சின்னத்திற்க்கு வாக்களியுங்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement