• May 11 2024

தமிழ் மக்களின் பண்பாட்டினை பாதுகாக்க விஷேட குழுவொன்றை நிறுவியுள்ளோம்- சுரேஸ் பிறேமச்சந்திரன்! samugammedia

Tamil nila / Apr 1st 2023, 8:53 pm
image

Advertisement

தமிழ் மக்களின் பண்பாட்டினை பாதுகாக்க  விஷேட குழுவொன்றை  நிறுவியுள்ளோம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். 


இன்று மாலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு .தெரிவித்துள்ளார். 



அவர் மேலும் குறிப்பிடுகையில், 


தற்போது அரசாங்கமானது பல்வேறுபட்ட அமைப்புக்களூடாக கலாச்சாரப் பண்பாட்டு அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது 


இது தொடர்பில் ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் பல்வேறு மனுக்களைக் கையளித்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.


கன்னியா வெந்நூரூற்றானது தமிழ் மக்களின் பண்பாட்டு இடமாகும். தற்போது அவ்விடம் தொல்பொருட் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் குருந்தூர் ஆதி சிவன் ஆலயம் இருந்த இடத்தில் இரவோடிரவாக இராணுவத்தினரின் ஆதரவுடன் பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளது.


இதேபோல் தற்போடு காலங்காலமாக வழிபட்ட வெடுக்குநாறி மலையிலுள்ள விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் அரசாங்கத்திற்குத் தெரியாமல் நடைபெறவில்லை.


இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இல்லாத சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் பண்பாடுகள் கலாச்சாரகள் அனைத்தும் அழித்தொழிக்கின்ற நடவடிக்கையாகத்தான் தமிழ் மக்கள் அவதானிக்கின்றார்கள்.


இவற்றை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் 7 தமிழ்க் கட்சிகளும் 22 பண்பாட்டு அமைப்புக்கள, சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இன்று ஒன்று கூடி கலந்துரையாடினோம். 


இதன் நிறைவில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் அரசாங்கத்திற்கு எதிராக பூரண எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தீர்மானமொன்றை எடுத்துள்ளோம்.


இத்தோடு அரசாங்கம் தமிழ் மக்களை பண்பாட்டு ரீதியாக அழித்து வரும் நிலையி்ல் அது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.


இவற்றை நடைமுறைப்படுத்த குழுவொன்றை இன்று நிறுவியுள்ளோம். அக் குழு மூலம்  எதிர்வரும்  நாட்களில் எதிரப்பு நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் மிக விரைவில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். - என்றார்.

தமிழ் மக்களின் பண்பாட்டினை பாதுகாக்க விஷேட குழுவொன்றை நிறுவியுள்ளோம்- சுரேஸ் பிறேமச்சந்திரன் samugammedia தமிழ் மக்களின் பண்பாட்டினை பாதுகாக்க  விஷேட குழுவொன்றை  நிறுவியுள்ளோம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இன்று மாலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு .தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது அரசாங்கமானது பல்வேறுபட்ட அமைப்புக்களூடாக கலாச்சாரப் பண்பாட்டு அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது இது தொடர்பில் ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் பல்வேறு மனுக்களைக் கையளித்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.கன்னியா வெந்நூரூற்றானது தமிழ் மக்களின் பண்பாட்டு இடமாகும். தற்போது அவ்விடம் தொல்பொருட் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது.இதேபோல் குருந்தூர் ஆதி சிவன் ஆலயம் இருந்த இடத்தில் இரவோடிரவாக இராணுவத்தினரின் ஆதரவுடன் பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளது.இதேபோல் தற்போடு காலங்காலமாக வழிபட்ட வெடுக்குநாறி மலையிலுள்ள விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் அரசாங்கத்திற்குத் தெரியாமல் நடைபெறவில்லை.இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இல்லாத சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் பண்பாடுகள் கலாச்சாரகள் அனைத்தும் அழித்தொழிக்கின்ற நடவடிக்கையாகத்தான் தமிழ் மக்கள் அவதானிக்கின்றார்கள்.இவற்றை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் 7 தமிழ்க் கட்சிகளும் 22 பண்பாட்டு அமைப்புக்கள, சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இன்று ஒன்று கூடி கலந்துரையாடினோம். இதன் நிறைவில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் அரசாங்கத்திற்கு எதிராக பூரண எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தீர்மானமொன்றை எடுத்துள்ளோம்.இத்தோடு அரசாங்கம் தமிழ் மக்களை பண்பாட்டு ரீதியாக அழித்து வரும் நிலையி்ல் அது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.இவற்றை நடைமுறைப்படுத்த குழுவொன்றை இன்று நிறுவியுள்ளோம். அக் குழு மூலம்  எதிர்வரும்  நாட்களில் எதிரப்பு நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் மிக விரைவில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement