விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நாங்கள் பிரிந்தவர்கள் என்பதை விட நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் என்றுதான் கூற வேண்டும்.
அந்த நிலையில் நாங்கள் எமது கிழக்கு மாகாண இளைஞர்கள், மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவே பிரிந்து வரும் முடிவினை எடுத்தோம் கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்னும் புதிய கூட்டணி கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான கனவான் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்திட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டு தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த 15 ம் திகதி சைச்சாத்திட ப்பட்டது.
இதனையடுத்து நடக்க இருக்கும் உள்@ராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு கனவான் ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்தியதையடுத்து பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைந்துள்ளனர்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இது புதிய இணைவல்ல நாங்கள் இணைந்து தான் இருந்திருக்கின்றோம்.
நான் மத்திய அரசோடு பயணித்தவன், பிள்ளையான் மாகாண அரசில் செயற்பட்டவர். அந்தக் காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பாரிய அபிவிருத்திப் பணிகளைகளை முன்னெடுத்து பலமாற்றங்களை உருவாக்கியிருக்கின்றோம். இன்று அதே நோக்கத்துடன் மீண்டும் இணைந்திருக்கின்றோம்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நாங்கள் பிரிந்தவர்கள் என்பதை விட நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த நிலையில் நாங்கள் எமது கிழக்கு மாகாண இளைஞர்கள், மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பிரிந்து வரும் முடிவினை எடுத்தோம்.
அதன் பிற்பாடு நாங்கள் பல துன்ப துயரங்களைச் சந்தித்திருக்கின்றோம். விடுதலைப் புலிகளை எதிர்த்து நின்று வென்றவர்கள் என்றால் அது நாங்கள் மட்டுமாகத் தான் இருக்க முடியும். அந்த தலைமையின் தவறான முடிவினாலேயே நாங்கள் வெளியேறினோம்.
அந்த நிலையில் கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட கட்சிதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.
இதனை நாங்கள் சாதாரணமாக நினைத்து விட முடியாது. பல்லாயிரக் கணக்கான போராளிகளின் தியாகங்களினால் அத்திவாரமிடப்பட்ட கட்சியே அது.
அக்காலம் ஆயுதக் கலாச்சாரம் மிகவும் தீவிரமாக ஊறியிருந்த நிலையில் மக்களை ஜனநாயக வழியில் கொண்டுவருவதென்பது மிகவும் கடினமான ஒரு விடயம்.
அந்த நிலையில் கிழக்கு மாகாண மக்களுக்கான அரசியலை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவந்த கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாகும். இதனை எவரும் மறுக்க முடியாது.
இன்று பல மாற்றங்களைக் கடந்து மீண்டும் நாங்கள் இணைந்திருக்கின்றோம். ஏனெனில் நாங்கள் எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தில் இருந்து வந்தோமோ அதே நோக்கத்திற்காக நாங்கள் மீண்டும் இணைந்திருக்கின்றோம்.
ஏனெனில் போலித் தேசியவாதிகளின் ஏமாற்றுவித்தைகள், அவர்களின் வளர்ச்சிகளை ஏற்றுக் கொள்ள் முடியாது. இன்று வடக்கு மாகாண மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கின்றார்கள்.
அவர்களே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைத் துரோகிகளாகக் கருதி கடந்த பொதுத்தேர்தலில் அவர்களை விரட்டியடித்திருக்கின்றார்கள்.
அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தைப் பொருத்த வரையில் எமது மக்கள் இன்னும் தெளிவாக வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனெனில் மிகவும் ஆபத்தான கட்டத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம்.
எனவே எமது இணைவென்பது தொடர்ந்தும் முடிவற்ற வளர்ச்சிப்பாதையை நோக்கியதாகவே இருக்கும். இது கிழக்கு மாகாணம் மாத்திரம் என்றிருக்காது. தமிழ் மக்களுக்கான உழைப்பு என்றும் இருக்கும்.
ஏனெனில் வரலாற்றைப் படைத்தவர்கள் நாங்கள், வரலாற்றை மாறியமைத்தவர்கள் நாங்கள். எங்கள் முன் நின்று தேசியம் பேசுவதற்கு எவருமே அருகதையற்றவர்கள்.
தற்போது தேசியம் தேசியம் என்று கூறி மக்களை ஏமாற்றி, புலம்பெயர் மக்களின் பணங்களைப் பெற்றுக் கொண்டு தங்கள் சுயநலங்களை வளர்ப்பவர்களே தேசியவாதிகளாக எங்கள் முன் வருகின்றார்கள். இதனை குறிப்பாக எமது போராளிகள், மாவீரர் குடும்பங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறிக் கொள்கின்றேன்.
அத்துடன் இந்த உள்ளூரட்சி சபைத் தேர்தலில் படகுச் சின்னத்தில் எங்கள் உறுப்பினர்கள் போட்டி போடுகின்றார்கள்.
அவர்களுக்கான வாக்குகளையும் எமது மக்கள் வழங்க வேண்டும். ஏனெனில் இருப்புகளை நிலைநாட்டுவதற்காக அந்த வாக்குகளை வழங்க வேண்டும் என்பதை அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
எங்கள் பயணம் வருகின்ற மாகாணசபையை நோக்கியதாகவே இருக்கின்றது. ஏனெனில் கடந்த காலத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துரோகம் செய்து எட்டு ஆசனங்களைப் பெற்ற முஸ்லீம்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியது.
ஆனால் அதற்கு முன்னர் மாகாண சபை ஆட்சியை தமிழர் சார்பில் நிரூபித்துக் காட்டியது பிள்ளையான் மட்டும் தான். வடமாகாணசபையை விக்கினேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அவர் பாரிய கல்விமானாக இருந்த போதிலும் பல மில்லியன் ரூபாய்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
அந்த வகையில் நாங்கள் அனுபவம் வாய்ந்த களத் தளபதிகளாகவும், அனுபவம் வாய்ந்த அரசியற் தலைவர்களாகவும் இன்று சாதித்திருக்கின்றோம். இவற்றை எமது கிழக்கு மாகாண மக்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும் எம்முடன் இணைய வேண்டும். இது வடக்கு கிழக்கு அல்ல இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கான அடித்தளாமாகவே இது அமையும்.
கிழக்கு மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவே விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்தோம் - கருணா தெரிவிப்பு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நாங்கள் பிரிந்தவர்கள் என்பதை விட நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த நிலையில் நாங்கள் எமது கிழக்கு மாகாண இளைஞர்கள், மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவே பிரிந்து வரும் முடிவினை எடுத்தோம் கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்னும் புதிய கூட்டணி கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான கனவான் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்திட்டனர்.நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டு தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த 15 ம் திகதி சைச்சாத்திட ப்பட்டது.இதனையடுத்து நடக்க இருக்கும் உள்@ராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து களமிறங்கியுள்ளனர்.இந்த நிலையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு கனவான் ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்தியதையடுத்து பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைந்துள்ளனர்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,இது புதிய இணைவல்ல நாங்கள் இணைந்து தான் இருந்திருக்கின்றோம்.நான் மத்திய அரசோடு பயணித்தவன், பிள்ளையான் மாகாண அரசில் செயற்பட்டவர். அந்தக் காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பாரிய அபிவிருத்திப் பணிகளைகளை முன்னெடுத்து பலமாற்றங்களை உருவாக்கியிருக்கின்றோம். இன்று அதே நோக்கத்துடன் மீண்டும் இணைந்திருக்கின்றோம்.விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நாங்கள் பிரிந்தவர்கள் என்பதை விட நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த நிலையில் நாங்கள் எமது கிழக்கு மாகாண இளைஞர்கள், மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பிரிந்து வரும் முடிவினை எடுத்தோம்.அதன் பிற்பாடு நாங்கள் பல துன்ப துயரங்களைச் சந்தித்திருக்கின்றோம். விடுதலைப் புலிகளை எதிர்த்து நின்று வென்றவர்கள் என்றால் அது நாங்கள் மட்டுமாகத் தான் இருக்க முடியும். அந்த தலைமையின் தவறான முடிவினாலேயே நாங்கள் வெளியேறினோம்.அந்த நிலையில் கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட கட்சிதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி. இதனை நாங்கள் சாதாரணமாக நினைத்து விட முடியாது. பல்லாயிரக் கணக்கான போராளிகளின் தியாகங்களினால் அத்திவாரமிடப்பட்ட கட்சியே அது.அக்காலம் ஆயுதக் கலாச்சாரம் மிகவும் தீவிரமாக ஊறியிருந்த நிலையில் மக்களை ஜனநாயக வழியில் கொண்டுவருவதென்பது மிகவும் கடினமான ஒரு விடயம். அந்த நிலையில் கிழக்கு மாகாண மக்களுக்கான அரசியலை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவந்த கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாகும். இதனை எவரும் மறுக்க முடியாது.இன்று பல மாற்றங்களைக் கடந்து மீண்டும் நாங்கள் இணைந்திருக்கின்றோம். ஏனெனில் நாங்கள் எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தில் இருந்து வந்தோமோ அதே நோக்கத்திற்காக நாங்கள் மீண்டும் இணைந்திருக்கின்றோம்.ஏனெனில் போலித் தேசியவாதிகளின் ஏமாற்றுவித்தைகள், அவர்களின் வளர்ச்சிகளை ஏற்றுக் கொள்ள் முடியாது. இன்று வடக்கு மாகாண மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கின்றார்கள். அவர்களே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைத் துரோகிகளாகக் கருதி கடந்த பொதுத்தேர்தலில் அவர்களை விரட்டியடித்திருக்கின்றார்கள்.அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தைப் பொருத்த வரையில் எமது மக்கள் இன்னும் தெளிவாக வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனெனில் மிகவும் ஆபத்தான கட்டத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம். எனவே எமது இணைவென்பது தொடர்ந்தும் முடிவற்ற வளர்ச்சிப்பாதையை நோக்கியதாகவே இருக்கும். இது கிழக்கு மாகாணம் மாத்திரம் என்றிருக்காது. தமிழ் மக்களுக்கான உழைப்பு என்றும் இருக்கும்.ஏனெனில் வரலாற்றைப் படைத்தவர்கள் நாங்கள், வரலாற்றை மாறியமைத்தவர்கள் நாங்கள். எங்கள் முன் நின்று தேசியம் பேசுவதற்கு எவருமே அருகதையற்றவர்கள்.தற்போது தேசியம் தேசியம் என்று கூறி மக்களை ஏமாற்றி, புலம்பெயர் மக்களின் பணங்களைப் பெற்றுக் கொண்டு தங்கள் சுயநலங்களை வளர்ப்பவர்களே தேசியவாதிகளாக எங்கள் முன் வருகின்றார்கள். இதனை குறிப்பாக எமது போராளிகள், மாவீரர் குடும்பங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறிக் கொள்கின்றேன்.அத்துடன் இந்த உள்ளூரட்சி சபைத் தேர்தலில் படகுச் சின்னத்தில் எங்கள் உறுப்பினர்கள் போட்டி போடுகின்றார்கள். அவர்களுக்கான வாக்குகளையும் எமது மக்கள் வழங்க வேண்டும். ஏனெனில் இருப்புகளை நிலைநாட்டுவதற்காக அந்த வாக்குகளை வழங்க வேண்டும் என்பதை அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.எங்கள் பயணம் வருகின்ற மாகாணசபையை நோக்கியதாகவே இருக்கின்றது. ஏனெனில் கடந்த காலத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துரோகம் செய்து எட்டு ஆசனங்களைப் பெற்ற முஸ்லீம்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியது. ஆனால் அதற்கு முன்னர் மாகாண சபை ஆட்சியை தமிழர் சார்பில் நிரூபித்துக் காட்டியது பிள்ளையான் மட்டும் தான். வடமாகாணசபையை விக்கினேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அவர் பாரிய கல்விமானாக இருந்த போதிலும் பல மில்லியன் ரூபாய்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அந்த வகையில் நாங்கள் அனுபவம் வாய்ந்த களத் தளபதிகளாகவும், அனுபவம் வாய்ந்த அரசியற் தலைவர்களாகவும் இன்று சாதித்திருக்கின்றோம். இவற்றை எமது கிழக்கு மாகாண மக்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும் எம்முடன் இணைய வேண்டும். இது வடக்கு கிழக்கு அல்ல இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கான அடித்தளாமாகவே இது அமையும்.